பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விந்தன்

கூ, குப் குப் குப் கடவுளே! கடைசி நிமிஷத்தில் கடவுளைத்தான் நினைக்க வேண்டுமாம் - உயிரோடு இருக்கும்போது வாழா விட்டாலும், செத்த பிறகாவது வாழ!...

கூ, குப் குப் குப்! என்னைக் கொல்ல வரும் ரயிலின் குரலா, அது? - இல்லை; என் அண்ணாவின் குரல் - அவன் என்னை அழைக்கிறான்...

வந்துவிட்டேன் அண்ணா, இதோ வந்துவிட்டேன்! கண் மூடி, கண் திறப்பதற்குள்... ‘அடி, பாவி வாழைக் குருத்துப் போலிருக்கிறாயே? - உனக்கு என்னக் கேடு, உன் வாழ்வை நீயே முடித்துக் கொள்ள?”

இப்படி ஒரு குரல்; அந்தக் குரலைத் தொடர்ந்து கரடு முரடான ஒரு கை தன்னை இழுத்து அப்பால் எறிவதை அவள் உணர்ந்தாள் - உணர்ந்து, கண் விழித்தபோது...

தன்னைக் கடந்து செல்லும் ரயிலை மட்டும் அவள் காணவில்லை; கால் ஒடிந்து கிடந்த ஒரு கிழவன் - அவனுக்குச் சற்று தூரத்தில் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த ஒரு முழங்கால் துண்டையும் கண்டாள்!

“ஐயோ, தாத்தா என்னாலா உங்களுக்கு இந்தக் கதி?” ஒடிப் போய்க் கிழவனைப் பார்த்தாள் அவள் பேச்சற்று விழுந்து கிடந்த அவனுக்கு மூச்சாவது இருக்கிறதா? - மூக்கருகே கையை வைத்துப் பார்த்தாள்; இருந்தது!

நல்ல வேளை இறக்கவில்லை; என்னைக் காப்பாற்றிய குற்றத்துக்காகக் கிழவன் இறக்கவில்லை!