பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 49

யல்லவாக் கொடுத்திருக்கிறார்? ஒரு கால் போனால் என்ன, ஒர் உயிர் பிழைப்பதற்கு?

கிழவன் மெல்ல நகர்ந்து போய்த் தனக்குச் சற்றுத் துரத்தில் விழுந்து கிடந்த தன் முழங்கால் துண்டை எடுத்தான்.

என்ன அற்புதமான வேலைப்பாடு, என்ன அற்புதமான வேலைப்பாடு: கிட்ட த்தட்ட நாலடி இருக்கும் காலுக்கு ஒர் அடிகூட இல்லாத பாதம்; அந்தப் பாதத்தின் விளிம்பில் பெரிதும் சிறிதுமாக ஐந்தே ஐந்து விரல்கள் - அவ்வளவு தான்!

இந்த மனிதன் இருக்கிறானே, இவன் எதைச் செய்தாலும் நாலு கால்கள் வைத்துச் செய்கிறான்; எதை ஒட்டினாலும் நாலு சக்கரங்கள் வைத்து ஒட்டுகிறான் - தப்பித் தவறி இரண்டு சக்கரங்கள் வைத்து விட்டால், மாட்டையோ மனிதனையோ துணைக்கு அழைத்துக் கொண்டு விடுகிறான், ஒட்ட ஆனால் கடவுள்? இரண்டே இரண்டு கால்களை வைத்து விட்டு மனிதனை நடக்க வைக்கிறார், ஒட வைக்கிறார், குதிக்க வைக்கிறார், தாண்டக்கூட வைக்கிறார் - என்ன அற்புதமான வேலைப் பாடு, என்ன அற்புதமான வேலைப்பாடு!

கிழவன் கண்ணை மூடினான், அந்த அற்புதமான வேலைப்பாட்டுக்குரிய தொழிலாளியைப் பார்ப்பதற்காக ஆம். அப்படி ஒரு நம்பிக்கை அவனுக்கு!

அவனைப் பொறுத்தவரை இருளில் ஒளியாகவும் ஒளியில் இருளாகவும் இருக்கிறாரோ, அந்தத் தொழிலாளி?

இருக்கலாம்; யார் கண்டது? - அவன் காண்பதாகச் சொல்கிறான்; இல்லை; நீ காணவில்லை!” என்று சொல்ல நாம்தான் எண்ணத்தைக் கண்டோம்?

ld. Ldm - 4