பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 53

மண் குடிசையிலே ஒரு விதமாகவும், மாட மாளிகையிலே இன்னொரு விதமாகவும் இயங்க உன்னால் எப்படி முடிகிறது, அன்பே?

‘ஏன் முடியாது. மனிதர்களுடன்தானே நானும் பழகுகிறேன்!” என்கிறாயா? - சரி; ரொம்ப சரி!

ஆனால்...

மிருகங்களுடன் பழகும்போது ஒற்றையான நீ ஒற்றையாகத்தானே இருக்கிறாய்? அங்கு மட்டும் அப்படி இயங்க உன்னால் எப்படி முடிகிறது?

அவை படிக்கவில்லை; படித்து, அறிவை வளர்த்துக் கொள்கிறோம் என்று ஆசையை வளர்த்துக் கொள்ள வில்லை!” என்கிறாயா? அதுவும் சரி; என்னுடைய அனுபவத்தைப் பொறுத்த வரை அதுவும் ரொம்ப ரொம்பச் சரி:

இந்தச் சமயத்தில் தனக்கென்று ஒர் ஊன்று கோலைத் தானே செய்து கொள்வதில் முனைந்திருந்த கிழவன், ‘வயிற்றைப் பார்க்காமல் வானத்தைப் பார்த்துக் கொண்டி ருக்கிறாயே, அம்மா! எப்பொழுது சாப்பிட்டதோ, என்னமோ? உள்ளே போய் அந்த மூட்டையையாவது எடுத்துக் கொண்டு வாயேன்; அதில் பொரிவிளாங்காய் உருண்டை, பொரித்த அவல், நிலக்கடலை, பனைவெட்டு எல்லாம் இருக்கின்றன. உனக்கு எது பிடிக்குமோ, அதைச் சாப்பிட்டுக் கொண்டிரு; அதற்குள் சோறாக்கி விடுவாள், உன் தங்கச்சி!’ என்றான், ‘அன்னையினும் பரிவுடையோனாக.

இதைக் கேட்டதும் பேராசிரியருடன் பழகிய நாட்களில் அவள் கண்ட சில காட்சிகள் அவளுடைய கவனத்துக்கு வந்தன;