பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

என்றார் பேராசிரியர். அவனிடம் பதினைந்து காசுகள் இருந்திருந்தால் அவன் ஏன் நம்மிடம் வந்து ஒரு பிடி அன்னம் கேட்டிருக்கப் போகிறான்? என்றாள் காதலி. ‘உனக்குத் தெரியாது; இவர்களெல்லாம் கையில் காசு வைத்துக்கொண்டே ஒசிச் சோற்றுக்கு ஒப்பாரி வைப்பார்கள்’ என்ற அவரே அவன் சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தார்; ஒன்றுமில்லை. மடியைத் தடவினார்; காதறுந்த செருப்புகள் இரண்டை அவன் அங்கே செருகி வைத்திருந்தான். ‘பழைய செருப்பு களுக்குத்தான் இப்போது ஏகக் கிராக்கியாச்சே, பதினைந்து காசுகள் பெறாதா, இது? பெறும், பெறும்!” என்று அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ‘இப்போது விடு, காவலர்க்கு அழைப்பு!” என்றார் பேராசிரியர். காதலி அவ்வாறே செய்ய, போலீஸார் வந்து அவனுடைய பிரேதத்தை அப்புறப்படுத்துவாராயினர் சுபம், மங்களம், முற்றும்!” என்று கதையைச் சொல்லி முடித்தாள் நறுமணம்.

‘புத்திசாலிதான்; மகா புத்திசாலிதான்!” என்றான் கிழவன். -

‘சரியான பேத்திதான்; தாத்தாவுக்குச் சரியான பேத்திதான்!” என்றான் தறுதலை.

‘அந்தப் புத்திசாலியின் கதை கிடக்கட்டும், அக்கா! நீ உன்னுடையக் கதையைச் சொல்லு?’ என்றாள் தாழம்பூ, அவள் ஏற்கெனவே சொன்னதும் அவளுடைய கதையின் ஒரு பகுதிதான் என்பதை அறியாமல்.

“என்னுடைய கதையைச் சொல்ல எனக்கு விருப்ப

மில்லைதான்; இருந்தாலும் உனக்கு அது ஒர் எச்சரிக்கையாக இருக்கும் என்பதற்காகச் சொல்கிறேன்!” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் நறுமணம்,

<> <> <>