பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உன்னுடைய விருப்பம்போல் செய்!” என்றேன். நானும், எப்படியாவது பெங்களுரை விட்டுப் போனால் போதும் என்றக் கவலையில்.

ஆனால்...

அந்த வேலையும் கிடைக்கவில்லை அவனுக்கு - “ஏன்?” என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் எனக்கு விசித்திரமாக மட்டும் இல்லை; வேடிக்கையாகவும் இருந்தது.

‘சென்னை மவுண்ட் ரோடில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கிறது; வாலிபர் ஒருவர் அதை ஒட்டிக்கொண்டு வருகிறார்; அப்போது ரோடுக்குக் குறுக்கே வந்த யுவதி ஒருத்தியின் மேல் கார் மோதி விடுகிறது; காரில் அடிபட்டு அவள் கீழே விழுந்து விடுகிறாள்; போலீஸார் வந்து அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு, டிரைவரைக் கைது செய்கிறார்கள் - இந்தச் செய்திக்கு நீங்கள் என்ன தலைப்புக் கொடுப்பீர்கள்?” என்று அந்தப் பத்திராதிபர் என் அண்ணாவைக் கேட்டாராம். அண்ணா, ‘மவுண்ட் ரோடில் கார்விபத்து; டிரைவர் கைது!” என்று கொடுப்பேன்” என்றானாம்; ‘இப்படித் தலைப்புக் கொடுத்தால் அந்தச் செய்தியை யார் படிப்பார்கள்?’ என்றாராம் பத்திராதிபர்; எப்படிக் கொடுக்கவேண்டும்?’ என்று கேட்டானாம் அண்ணா: ‘பருவப் பெண்ணின் பாவாடையில் ரத்தம்; வாலிபர் கைது” என்று கொடுக்க வேண்டும் - என்ன கொடுப்பீர்களா, இம்மாதிரியே ஒவ்வொரு செய்திக்கும்?” என்றாராம் பத்திராதிபர். என் அண்ணாஎழுந்து முடியாதய்யா பருவப் பெண்ணின் பாவாடையிலும், அவள் பாவாடையில் படும் ரத்தத்திலுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்க என்னால் முடியாதய்யா