பக்கம்:மனிதப் புனிதர் கக்கன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கனையே சாரும். தன்னுடைய செல்வாக்கைப் பயன்டுத்தி நீர்ப்பாசனத் திட்டத்திற்கு மைய அரசிடம், மாநில அதிகமான நிதியினைப் பெற்றுப் பல அணைக்கட்டுகள் கக்கனால் கட்டப்பட்டன.

1957ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் திட்டக்குழுத் துணைத் தலைவர் வி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களுடன் பல்வேறு திட்டங்களை விளக்கமாக எடுத்துக் கூறி அணைக்கட்டுகள் மற்றும்நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டிட நிதி உதவியினைப் பெற்றார்.

ஆரணியாற்றுத்திட்டம் கோயமுத்தூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இக்காலத்தில் காட்சியளித்தாலும், அக்காலத்தில் மலைப் பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான நீரைத் தேக்கிவைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்திற்குக் கக்கன் அரும்பாடுபட்டார். 3000 ஏக்கர் நிலங்கள் சாகுபடி பெற்றிட வழிவகை செய்யக்கூடிய நிலையில் ஆரணியாற்றுத் திட்டத்தைக் கக்கன் கொண்டுவந்தார். 6.5.1957இல் கக்கனால் இத்திட்டம் துவக்கப்பட்டு 104.12 இலட்சம் ரூபாயில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தால் இன்றளவும் கோவை மாவட்டத்தில் விவசாயம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி திட்டம் சேலம் பகுதியில் விவசாய முன்னேற்றத்தில் கக்கன் அதிகமான கவனம் செலுத்தினார். ஏற்காடு மலைச் சரிவிலிருந்து வீணாகப் போகும் நீரைத் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் 202.28 இலட்சம் ரூபாய்ச் செலவில் 6500 ஏக்கர் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படும் வகையில் கிருஷ்ணகிரி திட்டத்திற்குக் கக்கன் 28.1.1958 அன்று அடிக்கல் நாட்டினார். விவசாயப் பலநோக்குத் திட்டம் தேவை என்பதனை உணர்ந்து சலிப்படையாமல் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து மக்களின் எண்ணப்படி செயல்பட்ட பெருமை கக்கனுக்கு உண்டு.

மணிமுத்தாறு திட்டம் திருநெல்வேலிப் பகுதியில் விவசாயம் மேம்பாடு அடைய வேண்டும் என்பது அப்பகுதி வாழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, கக்கன் தனிக்கவனம் செலுத்திட 505 இலட்சம் ரூபாய்ச் செலவில் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில்