பக்கம்:மனிதர்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& எப்படியும் இருக்கலாமே! இதுவும் அறிவாளி வகுத்த தத்து. வம்தானே? மேலும் திருமலையப்பர் தம்முடைய பொருளா லும் அறிவாலும், வேதாந்த தத்துவ விசாரணைகளினாலும் அறிவாளிகளுக்கெல்லாம் விருந்து அளிக்கவில்லையாஎன்ன? அறிவொளி சுடர்விட்டுப் பிரகாசிக்க உதவுவது புனிதமான யாகம் வளர்ப்பதற்கு ஈடானது அன்றோ? ஆகவே, ஞானப் பசியர்கள் சிறு விஷயங்கள் பற்றி வீண் கவலை கொள்வ தில்லை , ஆராயப்போனால் அவர்களும் ஒரு கிளைப்பறவை' கள்தானே! பெரும் வியாபாரியின் பாங்குக்கணக்கு ஏறிக்கொண்டே போகிறது. கார், பங்களா, உயர்ரகச் சாப்பாடு-இப்படி வாழ்க்கை வசதிகள் குறைவற உள்ளன. வாழ்க்கை யில் வெற்றி என்ற ஒருநிறைவு. அவர் கல்விமான். சுயமாகச் சிந்திக்கும் அறிவாளி அவருக்குப் பணம் சேர்வதைக் கண்டு பொறாமைப் படுகிறவர்கள் கருப்புச் சந்தை' கள்ள தோட்டு’ என்று முணுமுணுப்பது வழக்கம். அதைக் குறித்து அவர் ஏன் கவலைப்படவேண்டும்? உயர்ந்த சிந்தனை களில் பறந்து ஞானத்தின் மூலத்தைக் கண்டு பிடித்தாக வேண்டிய கவலையும் கடமையும் அவருக்கு இருக்கிறதே. டாக்டர்-ரொம்பவும் கைராசிக்காரர். திறமைசாலி. மாதத்தின் முதல் வாரத்தில் அவர் வீட்டுமுன் காததுக் கிடக்கும் கூட்டமே விளம்பரப்படுத்தும் அவருடைய தொழில் வெற்றியைப் பற்றி. மினுமினுக்கும் பட்டா டை களும், ஒளிவெட்டும் வைரக்கம்மல்களும், பளபளக்கும் காரில் வந்து இறங்கும். வைத்தியம் செய்துகொள்ளத்தான். டாக்டருக்கு நல்ல வரும்படி, கட்டணம் அதிகம்தான். தங்கமும் வைரமும் பட்டும் சுமக்கும் உல்லாசிகள் டாக்டர் ஃபீஸ் பற்றி ஏன் கவலைப்படுவார்கள்? பெண் வியாதி” களில், மர்ம நோய்'களில் வேண்டாத விளைவுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/10&oldid=855422" இலிருந்து மீள்விக்கப்பட்டது