பக்கம்:மனிதர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 ஆச்சர்யம்தான். திறமை எங்கெங்கோ இருக்கு. எப்படி எப்படியோ மலருது. பிரகாசமா சிரிச்சுப் பல பேரைக் கவர்ந்தாலும் கவருது; கவராமலே டிம் அடிச்சுப் போனாலும் போகுது' என்று சொக்கலிங்கம் சொன்னார் வாய்ப்புக்கள் கிடைத்தால் இந்தக் கறுப்பசாமியும் தக தகன்னு ஜொலிக்கிற ஆசாமியா மாறினாலும் மாறி விடலாம். யாரு எந்த நேரத்திலே எப்படி மாறுவாங்க அல்லது என்ன ஆவாங்கன்னு என்னத்தை உறுதியாச் சொல்ல முடியுது இந்த வாழ்க்கையிலே' என்றும் அனு பந்தம் சேர்த்தார். சொக்கலிங்கம் மீண்டும் அந்தச் சிற்றுக்கு வருவதற்குள் ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அவர் அங்கே வந்தபோது ஊர் அப்படியேதானிருந்தது, பயிர்கள் வழக்கம்போல் பலன் தந்து கொண்டிருந்தன. இனற்றுநீர் பம்ப் செட் மூலம் மேலே வந்து, வாய்க்கால் வழி ஓடி, பாத்திகளில் ஜிலுஜிலுவென்று பாய்ந்தவண்ணம் இருந்தது. தண்ணிர் கருப்பஞ்சாறு மாதிரி ஜம்னு இருக்கு’ என்று ஒருவர் சொன்னதும்தான் அவருக்கு அவன் நினைவு எழுத்தது. ஆமா, இங்கே வேலை செய்துகிட்டிருந்த கறுப்ப சாமிப் புலவரை எங்கே காணோம்?' என்று நண்பரிடம் விசாரித்தார். அவன் என்ன ஆயிருப்பான்னு நீங்க நினைக்கீக?" என்று மறு கேள்வி போட்டார். ராமையா, எனக்கென்ன தெரியும் என்ன வேணுமின்னாலும் ஆகியிருக்கலாம். செத்துப் போனாலும் போயிருக்கலாம்" என்று சொக்கலிங்கம் சொன்னார். - புலவர் சாகலே, ஆனா ஆளு இப்படி அடியோடு மாறிப் போவான்னு யாருமே நினைச்சதில்லே. உங்களாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/100&oldid=855424" இலிருந்து மீள்விக்கப்பட்டது