பக்கம்:மனிதர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 அச்சுறுத்துகிறது. அவளை நான் எனது பள்ளிப் பருவத்தில், வழியில் சந்தித்த நினைவு... நீண்ட கறுப்புக் கோட்டு அணிந்த கருடமூக்குக் கணக்கு வாத்தியார், கண்கள் சிவக்க ஆங்காரமாக, எல்லாப் பையன்களையும் கையில் பிரம்பினால் வெளுத்து வாங் கியது வருகிறது. பள்ளிக்கூடம் முடிந்ததும், வயித்திலிங்க வாத்தியார் சாகாரா; எங்கள் வயித்தெரிச்சல் தீராதா?’ என்று நாங்கள் எல்லோரும் கூச்சல் போட்டதும், அந்த வருடத்திலேயே அவர் பிளவை கண்டு அறுவை சிகிச்சையில் ஒப்பேறாமல் செத்துப் போகவும் எங்கள் வயிற்றெரிச்சலின் 'விளைவுதான் அது என்று வருந்தி நாங்கள் கண்ணிர் விட்டதும் மேலெழுந்து உள்ளம் கனக்கிறது...அழுதா லென்ன? இப்போதும் அழுதால் என்ன? நான் ஆசையுடன் வளர்த்த காசித் தும்பைச் செடியில், முதல் பூ அடுக்கு அடுக்கான இதழ்களுடன் செக்கச் சிவந்து பூத்திருந்த அழகை அப்படியே செடியிலிருக்கவிட்டு நாள் முழுவதும் கண்டு மகிழ வேண்டும் என விரும்பியதும், பக்கத்து வீட்டுக் கன்னி வேகமாக வந்து வெடுக்கென அதைக் கிள்ளி எடுத்துக்கொண்டு அதே சுருக்கில் மறைந்து போனதும், என் நெஞ்சில் ஏற்பட்ட வடுவும்...என் கனவு களை ஆசைகளை எல்லாம் காலக் கன்னி கொய்து கசக்கி வீசி விடுவாள் என்பதன் ஸிம்பல் தானோ அது என்று என் உள்ளம் அடிக்கடி எழுப்பிய கேள்விக் குறியும்...இதோ, இதோ என் மனசில் அலை தெறிக்கின்றன. பள்ளிக்கூடத்தில் வருடாந்தரப் போட்டி விளையாட்டு நாள். ஸ்போர்ட்ஸ் டே. நானும் என் தம்பியும் சிநேகிதர் களும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தோம், உவகைக் கூச்சலுக்குக் குறைவே இல்லை. திடி ரென்று வானம் இருண்டது. பெருமழை பிடித்து விளாசி யது. மின்னலும் இடியும் பேயாட்டம் போட்டன. விளை யாட்டுக் குழப்பத்தில் முடிந்தது. எல்லோரும் நனைந்து கொண்டு, இருட்டில் தடுமாறியபடி ஓடலாயினர். நாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/106&oldid=855435" இலிருந்து மீள்விக்கப்பட்டது