பக்கம்:மனிதர்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼垂酸 விடுகிற உணர்ச்சிக் கொதிப்பையும் உளப் புழுக்கத்தையும் சகிக்க முடியாமல் பெரியவர்கள் எறிகிற வாய்வீச்சுகளை யும் கை வீச்சுகளையும் தாங்கிக்கொள்ள வேண்டிய, தவிர்க்க இயலாத, நிலையில் இருக்கிற சிறு பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணவும் எனக்குத் துயரம் அதிகரிக் கிறது... நான் ஆற்றங்கரையில் நிற்கிறேன். அதுவரை பெய் திருந்த பெருமழையின் பயனாக ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தனது கொடிய எண்ணங்களை உள் காடக்கிக் கொண்டு மெதுவாக மிடுக்கு நடைபோடும் வன விலங்கு மாதிரி, நாசவேலை நினைப்பையும் அழிக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தாமல் கவர்ச்சிகரமான காம் பீர்ய எழிலோடும் முன்னேறிச் செல்கிற ஒரு அணிவகுப்புப் போல, ஆறு நகர்ந்து கொணடிருக்கிறது. எவ்வளவு நேரம் நின்று கவனித்தாலும் அலுப்பு ஏற்படுத்தாத இயற்கை வனப்பு. என்ன ப்யா இங்கே நிக்கிறீக?’ கேட்டது யார் என்று பார்த்தால், சொர்ணம் பண்டிதர், நாட்டு வைத் தியர். ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தார், வெள்ளம் அதிகமா யிருக்கே?' என்றேன். இருந்தா என்ன! போய்வந்து பழக்கம்தான்" என்று அலட்சியமாகக் கூறி நீரில் பாய்ந்தார். பாதி ஆறு வரை போய்விட்டார். அப்புறம் சமாளிக்க முடியாது திணறினார். கால்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டது போலும். சுழித்தோடும் நீரின் இழுப்பு சக்தி அதிகமிருந்தது போலும். அவருடைய காலம் முடிந்துவிட்டதுதான் முக்கிய காரணமே போலும், முங்கி முங்கி எழுந்தது தலை. சொர்ணம் பண்டிதர் ஒரே அடியாகப் போய்விட்டார். அவரின் மரணத் தவிப்பை, கரையில் நின்ற நான் செயலற்ற வனாய்-எதுவும் செய்ய முடியாதவனாய்-கூப்பாடு கூடப் போடாமல், அப்படிக் கூச்சல் போட்டாலும் ஆள் நட மாட்டம் இல்லாத அந்த இடத்தில் எவ்விதப் பயனும் ஏற் படாது என்று உணர்ந்தவனாய், நெஞ்சு பதைக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/108&oldid=855438" இலிருந்து மீள்விக்கப்பட்டது