பக்கம்:மனிதர்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑鲁& வருகிறது. மேலேறி முன்னேறுகிறது. மணல் பரப்பில் மெதுமெதுவா ஊர்ந்து செல்கிறது. சிரமப்பட்டு நடந்து சிறிது சிறிதாக முன்செல்லும் அது என் நினைவில் அசை கிறது. எதற்காக நீரினுள்ளிருந்து இது வெளியே வந்து இப்படிச் சிரமப்படுகிறது என்று நான் நினைத்ததையும் எண்ணிக் கொள்கிறேன். மறுநாள் தெற்குக்கடற்கரை ரஸ்தாவில், ஒரு ஓரத்தில் செத்துக் கிடந்தது அந்த ஆமை, சாவதற்காகத்தான் அது கரைக்கு வந்தது போலும். லாரியோ எதுவோ அதை கொன்றிருக்கக் கூடும். மனிதர்கள் எவரேனும் சாகடித் திருக்கவும் கூடும். அல்லது இயற்கை மரணமாகவே இருத் தலும் கூடும். எப்படியோ உயிர்போய், உணர்வற்று இயக்க மற்று. அருவருப்புத் தரும் தோற்றமாய்க் கிடந்தது அந்த ஆமை. என்னுள் சோகத்தை புகுத்தியது. - அதே உணர்வு இப்போதும் பொங்கி வருகிறது... கிராமத்துக்குப் போக பஸ் கிடைக்காததனால் நான் நடக்கலானேன். ஆறுமைல் ஒரு பெரிய தூரமல்ல. ஆனால் நடுவழியில் மழை வந்து விட்டது. ஒரு ஆலமரத்தின் கீழ் ஒதுங்கினேன். குடையெனக் கவிந்து நின்ற அம்மரம் எனக்குக் குளுமையான நினைவை உண்டாக்க வில்லை. முன்னொரு சமயம், ஆலமரக் கிளை ஒன்றில் நாணிட்டுத் தொங்கிய கிழவன் ஒருவனின் உருவமும், அதை வேடிக்கை பார்க்கக் குழுமிய கூட்டமும் நினைவில் எழுந்தன. அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும், இல்லை. யாரோ அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை எனத் தோன்றும்படி இவ்வாறு கட்டித்தொங்க விட்டிருக்கி றார்கள் என்றும் விதவிதமாகப் பேச்சு எழுந்ததும் நினை வுக்கு வந்தது. . . . . - - இதுவெல்லாம் இப்போதும் என் நினைவில் எழுவானேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/110&oldid=855444" இலிருந்து மீள்விக்கப்பட்டது