பக்கம்:மனிதர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Ī 5 நடந்து கொண்டாள். தனது வீட்டில் பழகுவது போலவே, நாற்காவியில் சரிந்து கிடந்தும், தரையில் படுத்தும் புரண்டும், வாசல்படியில் சாய்ந்து நின்றும், கண்ணாடி முன் நின்று ஒப்பனைகள் செய்து களித்தும்-அவ்வாறு செய்யும்போதே அவருடன் வாயாடியும், பொழுது போக்கி GörfTটf . அவள் அவ்விதம் பேசுவது வெறும் தொணதொணப் பாகவும், அவள் அங்கிருந்து நேரம் போக்குவது வீண் காலக் கொலையாகவும் அவருக்குத் தோன்றவே இல்லை. மாறாக, மனசுக்கும் கண்ணுக்கும் இனிய குளுகுளு விருந்தாகவே அவர் அவற்றைக் கருதினார். ரசித்தார். திடீரென்று ஒரு நாள் சாந்தா அறிவித்தாள் நான் கவிதை எழுதுகிறேன்’ என்று. வந்ததடா விபத்து!’ என்று அவர் எண்ணி முடிப்பதற். குள்ளேயே, இதோ இருக்கு நான் எழுதிய கவிதைகள் படிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என்று அவள் உத்தரவிட்டாள். - வளைகள் அணியாமல் வெறும் ரிஸ்ட்வாட்ச்” மட்டுமே. கட்டிய கரம்தான் என்றாலும், அது ஆணைகாட்டும் போது மறுத்துரைக்கும் வலிமையை அவர் பெற்றிருக்க வில்லை. உடனடியாகவே படித்துப் பார்த்தார். பேஷ் பேஷ்! நன்றாகத்தான் எழுதியிருக்கிறாய்... அருமையாக இருக்குதே... அட, ஜோராக இருக்கே... பிரமாதம் என்று வியப்புரைகளை உதிர்த்தார். சாந்தா, நீ ஒரு கவிஞ. இப்படி உணர்ச்சிகளை எழுதிக் கொண்டே இரு. பெரிய கவிஞ ஆகி விடுவாய்' என்று அவர் பாராட்டினார். சாந்தா கலகலவெனச் சிரித்தாள். பெரிய கவிஞ. என்ன மகா கவிஞ ஆகும் எண்ணம் எனக்கு உண்டு. தமிழில் மகா கவிகள் பலர் இருந்திருக்கிறார்கன். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/117&oldid=855458" இலிருந்து மீள்விக்கப்பட்டது