பக்கம்:மனிதர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (3 டார் கதை வசனகர்த்தா தேவப்ரியன்'. இவர் ரசமான ஆசாமிநடிப்பைத் தொழிலாகக்கொண்டு வாழ்க்கையையும் நடிப்புக்கு உரிய வாய்ப்பாக மதித்து, நாடகமாடி களிக்கும். நடிப்புக் கலைஞர்களோடு பழகிப் பழகி, இவரும் தினசரி நடிப்புகளில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறவர். வரு க்குஎல்லோரும் நண்பர்கள். அவர்களிடையே விசித் திரப்பண்பினர் பலர். ஆகவே, சதானந்தத்தையும் அவர் நண்பராக அங்கீகரித்து, தாராளமாகப் பழகி வந்ததில் வியப்பு எதுவும் இல்லைதான். சதானந்தத்துக்கு எல்லோரும் வியப்புக்கு உரியவர் களாகவும், எல்லாம் வியக்கப்பட வேண்டியவனாகவும்தான் தோன்றின. இந்த மரத்தடி மாநாடு’ம் வேடிக்கையுறக் காண்பதற்கு ஏற்ற ஒரு நாடகம் போல்தான் பட்டது. அவருக்கு. அது முதலில், ஆனால் நேரம் ஆக, ஆக விவா தங்களும் விளக்கங்களும் சூடுபிடித்து வளர வளர, அவரு டைய உள்ளத்தில் அலைகள் மோதலாயின. வாழ்க்கையைப் பற்றித்தான் பலரும் பேசினார்கள். ஒவ்வொருவர் பேச்சிலும் மரணம் என்பது முக்கிய இடம் பெற்றது. மரணத்தை வெல்லவேண்டும்; வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்-இதுவே அங்கு குழுமியிருந்த இன் டலெக்சுவல் ஒவ்வொருவரது இதயதாகமாகவும் கவலை யாகவும் விளங்கியதை சதானந்தம் உணர முடிந்தது. ஆத்மா என்றும், அமரன் என்றும், வானவன் மண்ண கம் வருவது போவது பற்றியும் அவர்கள் பேசினார்கள். சிந்தனைகளை உதிர்த்தார்கள். ஆற்றங்கரை ஓரமாக, தனித்து நடந்து கொண்டிருந்த சதானந்தத்தின் சித்தவெளியில் அவை இன்னும் அலை மோதின. . அலைகள்... -மண் ஏக்கத்தின்," தவிப்பின், வேண்டுதலின் நிலைக் களம் அதற்கு விண் அருள் புரியத் தவறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/12&oldid=855464" இலிருந்து மீள்விக்கப்பட்டது