பக்கம்:மனிதர்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35 அவர் வீட்டில் அடி பம்பு இருந்தது. அதில் வந்த தண்ணீர் சிறிது கடுத்திருக்கும். குடி தண்ணிருக்கும் சமைய அக்கும் தெருவில் உள்ள பொதுக் குழாய் நீரைத்தான் பயன்படுத்துவார்கள். ஒருநாள், பைப்பில் தண்ணிர் பிடித்து வரச்சென்ற வேலைக்காரி திரும்பி வருவதற்கு நேரமாயிற்று. அப்படியும் வெறும் குடத்துடன்தான் வந்தாள். கூட ஒரு கதையும் கொண்டு வந்தாள். -தண்ணிர் பிடிப்பதில் பெண்களுக்குள் தகராறு. ஒருத்தியே ஆறேழு பெரிய பாத்திரங்களில் பிடிப்பதில் முனைந்து நின்றாள். அடுத்தவளுக்கு இடம் விடாது. தகராறு பண்ணினாள். ஒவ்வொரு வீட்டுக்காரியும் இப்ப டியே செய்தாள். இதனால் சண்டை விளைந்தது. அவசர மாக ஒரு குடம் தண்ணீர் பிடிக்க முந்திய ஒருத்தியை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளினார்கள். அவள் ஆத்திரத் தோடு திட்டியவாறு திரும்பிப் போனாள். உடனடியாக அவள் புருஷன் வந்தான், கடப்பாறையும் கையுமாக. இது பொதுக் குழாய்! எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தண் ணர் கிடையாதுன்னு சொன்னா, ஊர்காரனுங்களுக்கும் இந்த பைப்பு முலம் தண்ணிர் கிடைக்கக் கூடாது என்று கத்தினான். குழாயையும் அதை இணைக்கும் பைப்புகளை யும் கடப்பாறையால் தகர்த்து நொறுக்கினான். கரும்புச் சாறு போன்ற அருமையான தண்ணிர் தெருவிலே பெருக் கெடுத்து ஓடியது. தொடர்ந்து ஒடலாயிற்று. குழாயை ரிப்பேர் பண்ண எவரும் முயற்சி எடுக்கவில்லை. முரட்டுத்தனமாக ஒருவன் தன்னகங்காரத்தோடும் மிருக பலத்தோடும் செயலாற்றத் துணிந்தபோது அவனைத் தடுக்க சக்தியற்றுப்போயிருந்தது அந்த ஊர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/127&oldid=855480" இலிருந்து மீள்விக்கப்பட்டது