பக்கம்:மனிதர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? கிராம சமு தாயத்துக்கு என்ன வந்து விட்டது?’ என்று எண்ணிப் பெரு மூச்செறிந்தார் சதானந்தம். மறுமொரு பொது நிகழ்ச்சி அவரது உள்ளக் குமை தலை அதிகப்படுத்தியது. டவுனுக்குப் போவதற்காக பஸ்சின் வரவை எதிர் பார்த்து பலர் காத்து நின்றார்கள். அவர்களில் சதானந்த மும் ஒருவர். வெகுநேரம் ஆகியும் பஸ் வரவில்லை. அது வராது என்று புரிந்தது. ஒருவன் குடித்துவிட்டு பஸ்சில் ரகள்ை செய்தானாம். கண்டக்டரை முறைத்தானாம். டிரைவரை ஏசிப்பேசினா னாம். ஸ்டாப்" இல்லாத இடத்தில் அவன் இறங்க வேண்டும் என்று பஸ்ஸை நிறுத்தும்படி சொல்லியிருக் கிறான். பஸ் நிறுத்தப்பட வில்லை. அதனால் கோபம் கோண்ட அவன் டிரைவரை அடித்தான் . பஸ் நிறுத்தப் பட்டது ஒரே அடியாக இதர பஸ்களும் ஊருக்குள் வரா. என்ற நிலைமை ஏற்பட்டது. லைட்னிங் ஸ்ட்ரைக் இது பல நாட்கள் நீடித்தது. வெளியூர் போகவேண்டியவர்கள் திண்டாடினார்கள். -இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? மனிதர்களுக்கு நாடு நெடுகிலும் நகரங்களிலும் கிராமங் களிலும் - என்ன ஏற்பட்டுவிட்டது? ஏன் இத்தகைய செயல் கள் பரவலாக அதிகரித்துக்கொண்டே போகின்றன? எண்ண அலைகள் அவர் உள்ளத்தில் புரண்டன. இப்படிப்பட்ட சிறிதும் பெரிதுமான பல செயல்கள் அவருக்கு உறுத்தல் தந்தது. அவர் மனம் சூடுற்றது. -சுதந்திரமாகச் செயல்படுகிற ஆசை பலரையும் பிடித் தாட்டுகிறது. தன்னலப் போக்கும், தான் எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/128&oldid=855482" இலிருந்து மீள்விக்கப்பட்டது