பக்கம்:மனிதர்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露盛 மாபெரும் சாதனை ஒன்றை வெற்றிகரமாகச் செய்து முடித்த பெருமகிழ்வு. ஆனால் சதானந்தம் உள்ளம் குறு குறுத்துக் கொண்டே இருந்தது. நாம் இந்தக் கூட்டத் துக்கு லாயக்கே இல்லை. வழி தவறி எங்கோ வந்து சேர்ந்து விட்டோம் என்ற மன உளைச்சல் அவரை அலைக்கழித்தது. அவர் வெறும் கேட்பர்’ ஆக இருந்தாரே தவிர தனது சிந்தனைக் குழப்பங்களை வெளியிடுகிறவராகவோ, தெளி வில் பிறந்த தத்துவங்களை உலுப்புகிறவராகவோ முன் வந்து பேசவில்லை. உண்மையில் அந்த அறிவாளிகளின் உயர்ந்த பேச்சுகளும் அவர்கள் எடுத்து அலசிய மேற்கோள் களும் பிறவும் அவருக்கு எவ்விதமான தெளிவும் ஏற்படுத்தி விடவில்லை. வாழ்க்கை பற்றி அவர்கள் எல்லோரும் தீர்க்கமான உண்மைகளை உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டவர்கள் போல் பேசியபோதிலும்,அவர்கள் வாழ்க்கை பின் முழுத் தன்மையையும்-அதன் சகல பண்புகள், கோணங்கள் உயர்வுகள், தாழ்வுகள் அனைத்தையும்சிந்தனையில் கொண்டு அபிப்பிராயங்களை உருவாக்க வில்லை என்ற எண்ணமே சதானந்தத்துக்கு உண்டாயிற்று. சந்தர்ப்ப சத்தினால், வாழ்வின் மேல்பரப்பில் நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பு பெற்றுவிட்டவர்கள். படிப்பு-பணம்-பதவி முதலியவற்றின் பலத்தினால் தங்களைத் தாங்களே உயர்த்தியவர்கள், வெற்றி வாழ்வு வாழ்கிறவர்கள், நல் வாழ்வு வாழத் தெரிந்தவர்கள் என்று பாராட்டிக் கொள்ளும் போக்கு பெற்றவர்கள் அனைவரும். தாங்களே உலகம் எனக் கருதி, தங்களுக்கு உகந்தனவற்றையே சரி யான நீதி’ என வகுத்துக் கொண்டு, மேலும் மேலும் சுக செளகரியங்களைத் தேடுவதிலேயே கண்ணாக இருக்கி றார்கள். அதற்காகத்தான் ஆத்மா அமரவாழ்வு, விண் ணவர்பேறு என்றெல்லாம் குழப்புகிறார்கள்...இப்படி அவர் எண்ணினார். - ஆற்றங்கரை மீது நெளிந்து வளைந்து நீண்டு கிடந்த இற்றையடித் தடத்தின் வழியே நடந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/14&oldid=855491" இலிருந்து மீள்விக்கப்பட்டது