பக்கம்:மனிதர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வுக்கு அதிகமாகத் தின்று, சிறுமைச் செயல்கள் பலவும்: புரியும் வசதிகள் பெறுவதற்கு வாய்ப்புகள். -நாகரிக மேல்மினுக்கு கொண்ட நகரங்களிலும், பாதாளச் சாக்கடையில், கழுத்தளவு அசுத்த நீர்க் குழம்பில் நின்று தொழில் புரிகிறவர்கள்...கிராமங்களில், சேறும் அசுத்தமும் நிறைந்த வயல்களில் உழவுத் தொழில் புரியும் மக்கள்...இவர்கள் பட்டினி வாழ்வு வாழ்கிற கொடுமை. இப்படி எவ்வளவோ! சதானந்தம் பெருமூச்செறிந்தார். ஒடும் நதியையே பார்த்தவாறு நின்றார். ஆந்தி நேரம் மேல்வானத்தை அழகும் ஒளி ஜாலமும் திறைந்த ஓவியக் காட்சியாக மாற்றியது. பதுங்கி வந்த இருள் ஒளியை மெது மெதுவாக விழுங்கலாயிற்று. ஆத்மீக சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கும் உயர்ந்தஅறிவாளி களின் குழுவில் கலந்து கொள்ளும் எண்ணத்தை ஒதுக்கிய வராய், சதானந்தம் ஆற்று மணல் பரப்பில் இறங்கி சிறிது தூரம் நடந்தார். மனசுக்குப் பிடித்த இடம் ஒன்றில் அமர்ந்து இயற்கை, நிகழ்த்தும் அற்புதங்களை ரசித்தவாறு இருந்தார். . . ஒளி மாய்ந்து இருள் வேகமாகப் பரவியது. ஒளி எழுந்து உலகைப் பளிச்சென விளக்கி, எங்கும் பரவிப் பாய்கிற செயல் அழகும் அற்புதமும் நிறைந்தது, ரசனைக்கு உரியது. அதேபோல, இருட்டு மெதுமெதுவாக வந்து, பின் லபக் கெனப் பாய்ந்து, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, ஆட்சி புரியத் தொடங்குவதும் ரசனைக்கு உரிய அற்புதமே ஆகும். இப்படி ஒரு எண்ணம் சுழியிட்டது. அவருள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/16&oldid=855495" இலிருந்து மீள்விக்கப்பட்டது