பக்கம்:மனிதர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏亨。 ஆன்மீக உயர்வு தேடும் இன்டெலக்சுவல் வகையராக் க்ளும்... - - சதானந்தம் உள்ளம் சலனமற்று நின்றது ஒரு கணம். அவர் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தார் சிறிது நேரம். குளித்து முடித்தவர்கள் போய்விட்டார்கள்.கொஞ்சம் பருக்கையும் தண்ணியும் கலந்து வயிற்றுப் பசியைத் தணித்துக் கொள்ளத்தான். - உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். உயிர்க் குலம் வாழவும் வளரவும் வகை செய்யும் உணவுப் பொருள்களைப் பயிரிடுகிறவர்கள், அத்தொழிலில் உழைக்கிறவர்கள் உணவு இல்லாமல் அவதியுறும் நிலைதான் நீடித்து வருகிறது. மனித குல உயர்வுக்குப் பாடுபடுவதாகப் பேசிப் புகழ் நாடும் சுகவாசிச் சாமியார்களும், மதவாதிகளும் உணவுப் பொருள் உற்பத்திக்காக உழைத்தாலாவது புண்ணியம் கிட்டும். அது பயனுள்ள நற்பணியாக அமையும். சதானந்தம் மனம் இவ்வாறு குறுகுறுத்தது. அவர் கண் திறந்து நெடுகிலும் பார்த்தார். வானம் பூராவும் நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. காணக் காண அலுக்காத காட்சி. குளிர்ந்த காற்று சிலுசிலுத்தது, உடலுக்கும் உள்ளத் துக்கும் இதமாக இருந்தது. - இந்த இடத்திலேயே படுத்துக் கிடக்கலாம் போலிருக் குது என்று எண்ணினார் அவர். அப்படியே படுக்கவும் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/19&oldid=855501" இலிருந்து மீள்விக்கப்பட்டது