பக்கம்:மனிதர்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 பின்னே, இவளுக இருக்கிறலெச்சனத்துக்கும், இவளுக னிடம் இருக்கிற கலைத் திறமைக்கும் நூறு நூறாகவா அள்ளிக்கொடுப்பாங்க? இந்த முப்பது ருபாகூட கிடைக்கா மல் எத்தனைபேரு லோல்படுறாங்க தெரியுமா?’ என்று அனுபவ ஞானத்தைக் கடைபரப்பினான் மற்றவன். ஒரு நாடகம் நடக்க இரண்டு மூணுமாதங்களாவது ஆகும். எத்தனையோ தடவைகள் ஒத்திகை நடக்கும். இதுக்கெல்லாம் சேர்த்து முப்பதே முப்பது ரூபாதான் அவங் களுக்கு என்பது ரொம்பக் குறைச்சல்தான் என்று இளகிய மனம் படைத்த கந்தையா உருகிப் போனான். கவலைப்படாதே வாத்தியாரே! அந்தப் பெண்களே இதுபற்றிக் கவலைப்படுவது கிடையாது. நீ ஏன் வீணாக அலட்டிக்கிறே? மேலும், இந்த ஏற்பாட்டினாலே அந்தப் பொண்ணுகளுக்கு வேறு பல லாபங்கள் இருக்கின்றன. ஒத்திகைகளின் போது வயிறு நிறைய டி.பன்-காபி கிடைக் கும். நடிக பிரதர்களின் கவனிப்பைக் கவர்ந்து அன்பளிப்பு கள் பெற முடியும். நாடகக்கலை ரோமியோக்களின் ஆசை யைத் துண்டி, அவர்களோடு உறவுகொண்டு, அவ்வப் போது பணம் பெறவும் முடிகிறது. உலகம் இருக்குதே, வாத்தியாரே, அது ரொம்பப் பெரிய விஷயம். ஒவ்வொரு துறையும் ஒரு பெரிய விஷயம்தான். ஒவ்வொன்றிலும் வெளிப்படையாகத் தோன்றுவது போக, ஆழ்ந்து ஆராய்ந் தால் மட்டுமே புலனாகக்கூடிய, அற்புத உண்மைகள் நிறையவே உண்டு என்று லெக்சரடித்தான் முத்துசாமி, அவன் ஒரு படா போர்’! புத்ததேவனுக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதுபோல இந்த போர் முன்னிலையில் கந்தையா வுக்கு ஞானம் உதயமாயிற்று. ஒகோ! இவ்வளவு விஷயங், கள் இருக்குதா?’ என்று தலையை ஆட்டிவைத்தான். - கலைக் காவலன்’ ஆகத் திட்டமிட்டிருக்கும் நாம் கலைஞர்களின் பாதுகாவலன் ஆக வேண்டியதும் அவசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/24&oldid=855509" இலிருந்து மீள்விக்கப்பட்டது