பக்கம்:மனிதர்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 என்று அந்த நிமிடமே அவன் இரண்டாவது உறுதியையும் மேற்கொண்டு விட்டான். ஆனால் இதை அவன் வாய் விட்டுச் சொல்லவில்லை. முத்துசாமி முதல் நாடகத்துக்காக மூன்று பெண்களை அழைத்து வந்தான். குமாரி தேவகி, பேபி நளினி, சாவித்திரி என்று அறிமுகப்படுத்தினான். ஒரிஜனல் பெயர்ை களை ஒதுக்கிவிட்டு அழகான பெயர்களை அணிந்து கொள்வது சினிமா, வட்டாரத்திய ஃபாஷன் அல்லது தொழில்முறை மட்டுமல்ல; உதிரிகள் நாடகத்துறையிலும் சகஜமாகிவிட்ட ஒரு வழக்கம்தான். இவர்களில் தேவகியைக் கந்தையாவுக்கு மிகுதியும் பிடித்துவிட்டது. "உயரம் கம்மியான, சதைப் பிடிப்பு உள்ள, பெண் களை நமக்டி அதிகம் பிடிக்கும்’ என்று அவன் அடிக்கடி சொல்வது உண்டு. அவனுக்குப் பிடித்த பெண் இலக்கணத் திற்குரிய இலக்கியமாக இருந்தாள் தேவகி. ஒத்திகை"கள் அமர்க்களமாக நடைபெற்றன. ஒவ் வொரு ஒத்திகை யுமே ஒரு விசேஷ நாடகம் போலிருந்தது. அரங்கேறப் போகிற நாடகத்துக்கான முன் தயாரிப்பு என் இற வெளிச்சத்தின் பின்னே, மூன்று பெண்களையுமே கதாநாயகிகளாகக் கொண்டு, சுவாரஸ்யமான காட்சிகள் உயிர்த்துடிப்போடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடிக்கப் பெற்றன. ஜிலு ஜிலுப்புக்கும் சிரிப்பின் கலீரிடல்களுக்கும் குறைவே இல்லை. ஒருநாள் இரவு, ஒத்திகை முடிவதற்கு இரண்டுமணி ஆகிவிட்டது. அன்று குமாரி தேவகி கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து, கலகலவென சிரிப்பைக்கொட்டி, வசியப் போஸ் கள் காட்டி, அற்புதமாக விளங்கினாள். வாத் தியார் கந்தையா’ அவளிடம் மனம் பறிகொடுத்தான். இத்தனை நேரத்துக்குப் பிறகு ரொம்ப தூரம் நடந்து போவானேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/25&oldid=855511" இலிருந்து மீள்விக்கப்பட்டது