பக்கம்:மனிதர்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேவகி இங்கேயே படுத்துக்கொள்ளேன்." என்று அன்பும் பரிவும் கலந்து கனிவுடன் கூறினான். அவன் பார்வையையும் பேச்சின் பொருளையும் , ந்து கொண்ட தேவகி, ஒயிலாக நின்று, ஒய்யாரமாக நே க்கி அர்த்தம் பொதிந்த மோகனப் புன்னகை பூத்தாள். அவவ வளவுதான். சொக்கிவிட்டான் பையன்!’ அன்று முதல் குமாரி தேவகி அந்த வீட்டிலேயே தங்கி விட்டாள். பாவம் கஷ்டப்படுகிற கலைமகள் ஒருத்திக்கு நம்மால் ஆன உபகாரம் செய்யலாமே என்ற நல்லெண்ண தான் காரணம் என்று அளந்தான் கலைக்காவலன் கந்தையா. ஆகா, உமது பரந்த நோக்கத்தையும் அன்பு உள்ளத் தையும் நாங்கள் அறியாமலா இருக்கோம்!” எனறார்கள் அவனுடைய நண்பர்கள். நண்பர் கலைக்குழு"வின் முதல் நாடகம் வெற்றிகர மாக நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ரொம்ப திருப்தி. கந்தையாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவனுடைய கலை முயற்சி வெற்றி பெற்று விட்டது; அவனுக்கு ஒரு கலைத் துணைவி கிடைத்து விட்டர்ள் என்பதனால்: சில மாதங்கள் கழிந்தன. என்ன நண்பர் கலைக்குழு அவ்வளவுதானா!" என்று சிலர் கேலி பேசலாயினர் : கந்தையா சும்மா இருந்து விடுவானா? எழுதினான் அடுத்த நாடகத்தை ஏற்பாடுகள் செய்தான் ஒத்திகைக்கு. இப்போது மிஸ் புஷ்பா என்ற பெண்மீது அவனுக்கு மோகம் பிறந்தது. அதன் விளைவாக, தேவகி இடத்தை காலி செய்து தரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதற் காக, அவளோ, கந்தையாவோ வருத்தப்படவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/26&oldid=855513" இலிருந்து மீள்விக்கப்பட்டது