பக்கம்:மனிதர்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2莎 கஷ்டப்படுகிற பெண்ணுக்கு நம்மாலான உதவி"ை செய்யலாம். அவள் வாழ்க்கை பூராவும் வைத்துக் காப் பாற்ற முடியுமா?’ என்றான் அவன். கரெக்ட், வாத்தியாரே!” என்று ஆமோதித்தான் நண்பன் முத்துசாமி. கந்தையா ஒரு பாலிசி வகுத்துக்கொண்டான் என்பது நாளடைவில் அவன் நண்பர்களுக்குப் புரிந்துவிட்டது. கந்தையா ஒரு புது நாடகம் எழுதிவிட்டான் என்றால் ஒரு புதிய ஜோடிக்கு திட்டம் போட்டு விட்டான் என்று அவர்கள் கணிக்க முடிந்தது. ஒரு நாடக ஒத்திகையின் போது கூடிய பெண்மீது கந்தையாவுக்கு அலுப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது என்பதற்கு அடையாளம்தான், நான் அடுத்த நாடகத்துக்கு ஐடியாப் பண்ணியாச்சு, எழுதவும் ஆரம்பித்தாச்சு' எனும் அவனது அறிவிப்பு என்றும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். இது குறித்து அவர்கள் குறை கூறவும் இல்லை. • உலகம் ரொம்பப் பெரிய விஷயம். அதில் எல்லாம் நடக்கும். எல்லாத்துக்கும் இடமிருக்கு!’ என்று முத்துசாமி சொல்வது வழக்கம். இந்தக் கணிப்பு கலைக் குழு’ நண்பர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. -

  • நான் நாடகக் கலைக்குப் பணி புரிகிறேன். அத்துடன் கஷ்டப்படும் கலைப் பெண்களுக்கும் நம்மாலான உபகாரம் பண்ணலாமே என்ற நினைப்பு. ஒரே பெண்ணுக்குத்தான் உதவி பண்ணவேண்டும் என்று என்ன கட்டாயம்? நமது அன்பும் உதவியும் நல்லெண்ணமும் பலருக்கும் பயன் படட் டுமே என்றுதான் இப்படிச் செய்கிறேன்’ என்று கந்தையா சொல்லலானான்.

வாத்தியார் கந்தையா வாழ்க! அவர் தயவால் நாடகக் கலையும் வாழும்; மன்மதக் கலையும் வளரும்: என்று ஆரவாரித்தான் முத்துசாமி. (1967),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/27&oldid=855515" இலிருந்து மீள்விக்கப்பட்டது