பக்கம்:மனிதர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔别 தானே அவங்க எல்லோரிடமும் சகஜமாகப் பழக வாராங்க என்று மணி நண்பனிடம் சொன்னான். - - இதைவிட மோசமா, பயங்கரமா எல்லாம் நடந்து கொள்வாங்க. அவங்க கிட்டே நயமாகப் பேசி, ஷோக்கான பொம்பளைகளிடம் கூட்டிப் போறேன்னு ஆசை காட்டி, எங்காவது இட்டுப்போப் பணத்தைப் பறித்துக்கொண்டு திண்டாட விட்டுடுவாங்க. அப்படிச் செய்றவங்களும் இருக் கிதாங்க. அதுவும் நடக்கத்தான் செய்யுது” என்றான் அவன். பேசுகிற பாஷை புரியாமல்.’ என்று மணி ஆரம்பிக் கவும், நண்பன் குறுக்கிட்டான்: இங்கேருந்து பாஷை தெரியாத இடங்களுக்குப் போறவங்களிலும், எத்தனையோ பேரு எத்தர்களிடம் சிக்கி ஏமாந்துதான் போறாங்க. மற்ற வங்க பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்கிறவங்க எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய் கிறாங்க, அவங்களும் மனுஷங்கதானே!" லாஞ்ச் ஒரு குலுக்கலுடன் நின்று விட்டது. இறங்க வேண்டிய இடம் வந்தாயிற்று. எல்லோரும் பரபரப்புடன் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அன்றைய அனுபவ அதிர்ச்சி உள்ளத்தில் ஏற்படுத்திய அண்மை வேதனையினால் சங்கடப்பட்ட மணி கடலையும் ை னையும் செயலற்று நோக்கினான். எப்போதும் போல் வலிமையோடும் வனப்போடும் தான் காட்சி அளித்தன இயற்கைச் சக்திகள். (1973)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/34&oldid=855530" இலிருந்து மீள்விக்கப்பட்டது