பக்கம்:மனிதர்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@皇 பூரிக்க நின்ற அழகுக் கன்னி அவரை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்தாள். அருமையான வேலைப்பாடு. அழகு விளையாடுது. அருள் கொஞ்சுது. இதோ வாய் திறந்து பேசிவிடுவேன் என்பதுபோல் அல்லவா பார்க்கிறாள்!" என்று அவர் எண்ணினார். ஒன்றரை அடி உயரக் கல்வில் உணர்ச்சியை ஒட விட்டிருக்கிறான். அவன் அல்லவா கலைஞன் உயிர் இல்லைதான். என்றாலும் ஜீவன் துளும்பு கிறது. இந்தச் சிலையில் என்றும் அவர் உள்ளம் பேசியது. அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண் டிருந்தார் சிறிது நேரம். X இப்போ மணி என்ன இருக்கும் என்ற உணர்வின் அரிப்பு அவரைக் கடியாரம் பக்கம் பார்வை ஏவும்படி துண்டியது. மணி 3-4 .ே - இவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் நேரம் படிக்க லாமே!" என்று எண்ணி, அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேஜைமீது அவருக்கு முன்னே விரிந்து கிடந்த பெரிய புத்தகத்தின் மேல் கண்கள் படித்தன. ஆனால், கவனம் படியவில்லை. அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பழைய நினைவுகளும் புதிய எண்ணங் களும் முட்டி மோதி முரண்டிக் கொண்டிருந்தன: அவர் பார்வை மீண்டும் சிலை அழகியைக் கொஞ்ச ஒடியது. சில நாட்களுக்கு முன்னே இது காட்டுக்கோயில் பீரகாரத்தில் மண்ணோடு மண்ணாகக் கிடந்தது. கவனிப் பாரற்றுக் கிடந்தது. இங்கே வந்த பிறகு ஜம்மென்று கொலு இருக்கிறாள் சுத்தரி..." புன்னைவனம் சிரித்துக்கொண்டார். சி ைல யு ம். அவரைப் பார்த்து பதிலுக்குக் குறுநகை புரிவது போலிருந் தி.து. - அற்புதமான சிலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/36&oldid=855535" இலிருந்து மீள்விக்கப்பட்டது