பக்கம்:மனிதர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4剑 படைக்கின்றன; அலைக்கழித்து பாடாய்ப் படுத்துகின்றன. எந் நேரத்தில் இவை ஒருவனை காலை வாரிவிடும், பித்த னாக்கும் அல்லது பேயனாக மாற்றும் என்று நிர்ணயிப் பதற்கு இல்லை. - புன்னைவனத்தின் மனம் ஒரு நிலைப்படவில்லை. அவருடைய உணர்ச்சிகள் தறிகெட்டுக் குழம்பி நின்றன; அவரைக் குழப்பத்தில் தள்ளின. அதிகமான உழைப்பு. ச ரி யா ன போஷாக்கு இல்லாமை. ஒய்வு இல்லாதது. போதிய தூக்கமின்மைஇவை எல்லாம் சேர்ந்து, என் நரம்புகளை பாதித்து விட்டன. ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிடணும். நிறைய ஒய்வு பெற்று, அருமையாகத் துரங்கவேண்டும்’ என்று அவர் தனக்கே உபதேசித்துக் கொண்டார். சிறிது கண்களை மூடினார். துரக்கத்தில் காணும் கனவு என்றும் சொல்ல முடியாது. தினைவு நிழலாடவிடும் உருவம் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று! ஒரு அழகி. இருட்டுக்கும் ஒளியூட்டும் நிலவுக்கதிர் யுவதி. வெண் னொளிப் பகட்டாடை அணிந்து, புன்னகை ஒளி பரப்பி வந்தாள். அவளது காலணிகள் கிணுகினுத்தன. அவள் நெஞ்சில் நிறைந்து உணர்வைக் கிளறிவிடும்படியான மணம் எழுப்பும் மலர்களைச் சூடியிருந்தாள். அவள் நின்ற இடம் எங்கும் அவ்வாசனை சூழ்ந்துவிட்டது. அவருக்கு அந் நறு மணம் மிகவும் பிடித்திருந்தது. கண்ணைத் திறந்து நன்றாகப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. ஆனால் இமைகளைத் திறக்க முடியவில்லை. நீ யார்?’ என்று கேட்க முயன்றார். ஏதோ ஊமைக் குரல்தான் எழுந்தது அவரிடமிருந்து. கவீர் சிரிப்பொலியை அவர் காதுகள் நன்றாகக் கிரகித்தன. அவர் நிமிர்ந்து உட்கார முயற்சித்தார். இரண்டு மென் கரங்கள் அவர் தோள்களை அழுத்துவது போலிருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/42&oldid=855548" இலிருந்து மீள்விக்கப்பட்டது