பக்கம்:மனிதர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலகம் ஒரு பல்கலைக் கழகம். வாழ்க்கை, அனுபன்ே கள்மூலம் கற்றுத்தருகிற, ஆசான். மனிதர்களே விதம் வித மான புத்தகங்கள். மனிதர்களை, அவர்களுடைய விந்தைக்குணங்களையும் விநோதமான போக்குகளையும், கண்டு ரசிப்பது இனிது விஷயமாகும். அவை கதைகள், நாவல்கள் முதலியவதி றுக்கு ஆதாரமான பொருள்களாகவும் அமைகின்றன. அப்படி வாழ்க்கையும் மனிதர்களும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவுகளும், மனச் சலனங்கள் பிறப்பித்தி எண்ணங்களும் கனவுகளும் சுவையான கதைகளாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெவ்வேறு காலங்களில் அவ்விதம் உருவாக்கப்பட்ட கதைகளில் பதின்மூன்று இந்தத் தொகுப்பில் இடம்பெத் றுள்ளன. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பத்திரிகை களில் பிரசுரம் பெற்ற கதைகள் ஆகும். இவற்றை வெனி யிட்ட பத்திரிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றி உரியது, இக்கதைகள் இப்போது பூங்கொடி பதிப்பகம் வெளி கபீடாகப் பிரசுரம் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவற்றை தொகுத்து அழகிய முறையில் புத்தக மாக வெளியிட முன்வந்த பதிப்பகத்துக்கும், என் இனிய நண்பர் வே. சுப்பையா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வல்லிக்கண்ணன் 10, வள்ளலார் பிளாட்ஸ், புதுத் தெரு, லாயிட்ஸ் ரோடு, சென்னை-600 005.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/5&oldid=855564" இலிருந்து மீள்விக்கப்பட்டது