பக்கம்:மனிதர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4器 பொங்கி எழுந்த அலையொன்று அவர்களை உயர்த்தித் தாழ்த்தியது. எதிரே வந்து சுழியிட்ட சிற்றலை அவர் களைக் குளிப்பாட்டியது. அவர்கள் தலை உயர்த்தி தண்ணீர் சிதறும்படி ஆட்டி உலுப்பிக்கொண்டு, கவிழ்ந்த கட்டுமரத்தின் மீது கை வீசி கrார்கள். அவர்களில் ஒருவன் ஒ:’ என்று அலறினான். வேக மாய் காலை ஓங்கி நீரில் உதைத்தான். மற்றவன் பார்த் தான், "சுறா...சுறா வருது, 岛灯5T丑” என்று கத்தினான். அலறியவன். சிக்கிரம் கட்டையை கவுரு என்று அம்முயற்சியில் ஈடுபட்டான் அவன். ஜலேந்திரன், கைகளால் கட்டு மரத்தை திமிர்த்த முயன்றவாறே, கால்களால் ஓங்கி ஓங்கி நீரை அ டி த் து ஒசைப்படுத்திக் கொண்டிருந்தான் தொடர்ந்து. வெள்ளி வளைவுபோல் பாய்ந்தது சுறா, மின்னல் கீற்று. போல் நெளிந்து புரண்டது. ஒளிக்கோடு போல் நீரை ஊடுருவித் தாவியது. அலைத்துளிகளில் மூழ்கிக் களித்தது. அவையோடு அலையாகி எவ்வித் துள்ளியது. வாலடித்து உற்சாகமாய் அணுகியது. நீரிலே கிடக்கும் மனித உருவம் தனக்கே உரிய இரைச்சி என்று மதித்து விட்டதுபோல, அம்மானை ஆடிய கடலிலே அல்லாடும் மனிதர்களில் ஒருவனோடு கண்ணாமூச்சி விளையாட விரும்பியதுபோல் அது நெருங்கியும் விலகியும், தொட்டும் விட்டும் ஒட்டியும் ஒடியும், துள்ளிக் கும்மாளியிட்டது. கூரிய பற்கள் காட்டிச் சிரித்தது கூற்றத் திருஉரு! அவர்கள் இதயம் திக்திக்கென்று அடித்தது. அவர்கள் பரபரச்போடு கட்டுமரத்தைச் சரிப்படுத்த முயன்றார்கள். நாகன் நழுவி நழுவி விழுந்தான். ஜலேந்திரன் சுறாவை: வெருட்டி ஒட்டப்பாடுபட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/50&oldid=855566" இலிருந்து மீள்விக்கப்பட்டது