பக்கம்:மனிதர்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姦2 நாகனும் ஜலேந்திரனும் துணியை வைத்துப் பொதிந்து அந்த இடத்தை மூடிக் கட்டினார்கள். உயிருக்கு வந்த ஆபத்து உடலின் ஒருபிடிச் சதையோடு போயிற்றே என்ற திருப்தி அவர்களுக்கு. சாவுடன் போராடத் தெம்பு தந்த பலம் இக்காயத் தைக் குணப்படுத்த உதவும் என்ற நம்பிக்கை ஜலேந்திர னுக்கு இருந்தது. அதனால் கலக்கமோ சோர்வோ கொள் ளாமலிருந்தான் அவன். (1950)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/54&oldid=855574" இலிருந்து மீள்விக்கப்பட்டது