பக்கம்:மனிதர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛5 மானால், அது நேரே அவன் தலைமீது விழுந்திருக்கும். முகத்தில் தாக்கி, மூக்கு நசுங்கி, மண்டை சிதைந்து போயி ருக்கக் கூடும். - அதிர்ச்சியோடு பதறி எழுந்த காத்தமுத்துவுக்கு இந்த உண்மை புரிந்தது. சத்தம் கேட்டு விழிப்படைந்து, என்னவோ ஏதோ என்று விரைந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையே திரும்பச் சொன்னார்கள். ! நீ ஒரு ஆசை பிழைச்சே! நீ செத்திருக்க வேண்டி யவன். பிழைத்தது மறு பிழைப்புதான் உன் அதிர்ஷ்டம் நீ இன்னும் உயிரோடு இருக்கிறே!’ என்று பலரும் பன்னிப் பன்னிப் பேசினார்கள். எவ்வளவு பெரிய கட்டி?” என்னமா சத்தம் கேட்டுது! அது தலைமேலே விழுந்தால் மனுசன் பிழைப் பானா!"-இப்படி ஆளுக்கு ஒன்று சொன்னார்கள். காத்தமுத்துவின் உடல் ரொம்பநேரம் நடுங்கிக் கொண் டிருந்தது. அவன் உள்ளப் பதைப்பு தணிய வெகுநேரம் ஆயிற்று. ஆனாலும், அந்தரங்கத்தில், அவனது உள்ளத் தின் ஆழத்தில், ஒரு பீதி வேரோடி விட்டது. அதன் பிறகு அவனுக்கு இருட்டில், அறைக்குள் தனி யாகத் தங்குவதற்கும், படுத்து உறங்குவதற்கும் பயம். பகல் பொழுதுகளில் கூட வீட்டுக்குள் நெடுநேரம் இருந் தால், அவன் உள்ளத்தில் காரணமற்ற, அர்த்தமற்ற, பயம் வந்து கவியும். அவன் உடல் நளுக்கிக் கொடுக்கும். திடீர் விபத்து ஏற்பட்டு தனக்கு ஆபத்து நிகழும் என்று மனம் பதைபதைக்கும். உடனே அறையை விட்டு அவசாமாக வெளியேறுவான் அவன். காத்தமுத்துவும் சில உறவினரும் ஒரு கிராமத்தில் நிகழ விருத்த கல்யாண விசேஷத்துக்குப் போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/57&oldid=855580" இலிருந்து மீள்விக்கப்பட்டது