பக்கம்:மனிதர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔8 கூடிய கேள்விகள், பேசக்கூடிய கேலிகள், சொல்லக்கூடிய உபதேசங்கள் விதம் விதமாய் அவனது மனவெளியில் ஒலிக்க, அவனை வெட்க உணர்வு பிடித்தது, அவர்கள் முகத்தில் விழிக்க அவன் நாணினான். அதிகாலை முகூர்த்தத்துக்காக அவன் அங்கே காத் திருக்கத் துணியவில்லை. காலையில் கண் விழித்ததும், அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் தேடியவர்கள் காத்தமுத்துவைக் காணாது திகைத்தார்கள். அவன் எவ ரிடமும் கூறிக்கொள்ளாது, எந்நேரத்தில் விழித்தெழுந்து, அவ்வூரை விட்டு வெளியேறினான் என்பது அவர்களில் யாருக்கும் தெரியவில்லை. ( 1988

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/60&oldid=855589" இலிருந்து மீள்விக்கப்பட்டது