பக்கம்:மனிதர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go மாகவா இருக்கிறது; என்ற ரீதியில் கல்ை கக்கத் தொடங் குவார் அவர். இதற்குக் காரணம் மாறியாடும் பெருமாளை, ஏமாறி விடும் சிறு பிள்ளையாக மாற்றிய காதலி எவளாவது இருந் திருக்கலாம் என்று எண்ணுகிறவர்கள், உண்மையை விட்டு விலகியே செல்கிறார்கள். அவருடைய மூத்த புதல்வன் மகிழ்வண்ணநாதன் தான் பிள்ளையைச் சீறி ஆடச் செய் யும் மகுடிநாதமாக வந்து வாய்த்தான். அவன் அவ்வாறுசெயல் புரிவான் என்று பிள்ளை அவர் கள் கனவில்கூட எண்ணியதில்லை. கல்லுளிமங்கன்' எனப் பலராலும் குறிப்பிடப்பட்ட இரண்டாவது புத்திர பாக்கிய மான மகர நெடுங் குழைக்காதன் ஏறுமாறாக ஏதாவது செய்திருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார். மா. ஆ. பெருமாள் பிள்ளைக்குத் தமிழ் மொழிமீது அபாரமான காதல் என்று சொல்வதற்கில்லை. அவர் தமது புதல்வர்களுக்கு அழகிய - இனிய - நீளப் பெயர்களைச் சூட்டிய காரணம், திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் திருநாமங்கள் அவை என்பதனால் தான். மூன்றாவது மகன் பிறந்தால், அவனுக்குத் திருப்பாற்கடல் நம்பி எனப் பெயரிட வேண்டும் என்று அவர் எண்ணி யிருந்தார். அவருடைய மனைவி ஆண்டாள் அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று ஏமாற்றி விட்டாள். ஆயினும் :சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற நீளப் பெயரிட்டு, பிள்ளை தமது ஏமாற்றத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டார். இவ்விதம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சிறுசிறு ஏமாற்றங் களையெல்லாம் சகித்துச் சமாளிக்கக் கற்றுக் கொண்ட பிள்ளை அவர்களின் மனமே முறிந்து போகும்படி அல்லவா அவருடைய செல்வ மகன் செயல் புரிந்து விட்டான்! சீதை என்கிற பெண்ணை அவன் காதவித்தான். பிள்ளையாண்டான் செய்த பெரும் பிழை அதுதான். அவன் குழல்வாய் மொழி என்றோ, குறுங்குழல் கோதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/62&oldid=855594" இலிருந்து மீள்விக்கப்பட்டது