பக்கம்:மனிதர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ! என்றோ அல்லது அப்படிப்பட்ட நீண்ட பெயர் எதுவோ உள்ள பெண்ணைத் தேடிப் பிடித்துக் காதலித்திருக்கக் கூடாது? போயும் போயும் சிதை என்கிற ஸிம்பிளான ஒரு. பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தானே! இது போன்ற சின்னப் பெயரெல்லாம் நம்ம அண்ணாச்சிக்குப் பிடிக்காதே, அது பையனுக்குத் தெரியலியே! என்று சுப்பையா முதலியார் அடிக்கடி சொல்ல ஒகு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டான் அவன். சுப்பையா முதலியார் இழவு வீட்டுக் கூட்டத்தில் கூட ஹாஸ்யமாகப் பேசும் பண்பு பெற்றவர். அவர் சுபாவத் துக்கு ஏற்ப. பேச்சிலே சுவை கூட்டிப் பேசினாரே தவிர அதுதான் உண்மையான காரணம் என்று சொல்ல முடி யாது. மகிழ்வண்ண் நாதன் சீதை என்ற பெண்ணைக் காத வித்து, அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று. அடம்பிடித்தது மா. ஆ. பெருமாள் பிள்ளைக்குப் பிடிக்க வில்லை என்பது உண்மை. ஆனால் பெண்ணின் பெயர் சீதை என்று இருந்தது அதற்குக் காரணமல்ல. அந்தத்சீதை அவருடைய ஏழைத் தங்கை லட்சுமி அம்மாளின் மகளாக இருந்ததுதான் அவரது வெறுப்புக்குக் காரணமாகும். நிலைமை முற்றி நெருக்கடியாக மாறுகிறவரை பிள்ளை அவர்களுக்குப் பையனின் காதல் விவகாரம் தெரியவே தெரியாது. எல்லாம் முற்றிவிட்ட பிறகு சீறி விழுவது தவிர அவர் வேறு எதுவும் செய்ய முடியாத பரா பரமாகி விட நேர்ந்தது. சீறினார், சிடுசிடுத்தார். மட சாம்பிராணி! காதலிக்கத்தான் காதலித்தானே-பெரிய இடத்துப் பெண்ணாக, பணக்காரன் மகளாகப் பார்த்துக் காதலிக்கப்படாது? பெரிய பண்ணை சீனிவாசம் பிள்ளை மகள் இல்லையா? கொளும்புப் பிள்ளைவாள் பேத்தி, மெத்தை வீட்டு ராமானுஜம் பிள்ளையின் மகள்பெண்களா இல்லாமல் போனார்கள்? இவன் விடியா மூஞ்சி லட்சுமியின் மகள் சீதை மேலே எனக்குக் காதல் என்று: முரண்டு மண்ணுகிறானே' என்று முணமுணத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/63&oldid=855595" இலிருந்து மீள்விக்கப்பட்டது