பக்கம்:மனிதர்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö考 உள்ளத்தையும், உணர்ச்சியையும் பாடாய் படுத்துகிறது என்பதற்கு உரிய விளக்கத்தை எவரும் கண்டுபிடிக்க வில்லை. மகிழ்வண்ண நாதனுக்கு மட்டும் அது எப்படிப் புரியும்? ஆனால் சீதையின் தோற்றம் எப்பொழுது அவனை கவர்ச்சிக்கும் காந்தமாக மாறியது என்பது அவன் நன்கு அறிவான். அவ்வூர்க் கோயிலில் வசந்த உற்சவத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. புதிதாகப் பொறுப்பு ஏற்றிருந்த தருமகர்த்தா ஒரு மேன் ஆப் ஐடியாஸ்' பழைய திருவிழாவில் புதுமை புகுத்த ஆசைப்பட்டு அவர் நயமான வேலைகள் சில செய்திருந்தார். செய்குன்றுகள், செயற்கை அருவிகள், பூஞ்சோலை மின் விளக்குகள், உயர்ந்த ஒரு பீடத்தில் தவமிருக்கும் சிவபிரான் என்றெல் லாம் கலையாக அமைக்கப்பட்டன. சிவனின் தலையிலி ருந்து செயற்கை நீரூற்று தண்ணிரை விசிறித் தெறித்தது. அதுதான் கங்கையாம்! இந்த அற்புதத்தைக் கண்டு களிக்க ஊரே திரண்டு சென்றது. பக்கத்து ஊர்களிலிருந்தும் படை படையாக ஜனங்கள் வந்தார்கள். மகிழ்வண்ண நாதனும், தனது நண்பன் ஒருவனுடன் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தான். மான்களும் மயில்களும், வானவில் வர்ண ஜாலம் காட்டும் மேனியரும் பொம்மெனப் புகுந்து மொய்க்கும். இனியதோர் உலகமாக மாறி யிருந்தது. வசந்த மண்டபம். பகலில் சோலைகளிலும் நந்தவனங்களிலும் தனது ஆற்ற லைக்காட்டும் வசந்தம் முன்னிரவிலே அந்த இனிய சூழலில் கொலுவிருந்தது போலும் - திடீரென்று அதோ பார் மகிழம்: ஒரு அழகி உன்மீது வைத்த கண்ணை மீட்க மறந்து போனாள்!’ என்று நண்பன் உரைக்கவும், மகிழ்வண்ண நாதன் அத்திசையில் தன் விழியை எறிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/67&oldid=855601" இலிருந்து மீள்விக்கப்பட்டது