பக்கம்:மனிதர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔8 தங்கக் கம்பியாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கு வாரு என்று தீர்மானித்தார் பிள்ளை. வீட்டை விட்டு வெளியே போ என்று ஆணை காட்டியது அவர் விரல். மகிழ்வண்ணன் போனான். அவன் அழைப்புக்கு இணங்கி, சீதையும் அவனைப் பின் தொடர்ந்தாள். மாறி ஆடும் பெருமாள் பிள்ளை அவர்களின் வீடு, துக்க வீடாக மாறிக் களை இழந்து காணப்பட்டது. அப்பொழுது முன்னிரவு நேரம். நிலவு இலேசாக அழுது வழிந்து கொண்டிருந்தது. குளிர் காற்று சிலு சிலுத்தது. மறுநாள் அழுகை நாளாகவே உதயமாயிற்று. இரவில் சினுசினுக்கத் தொடங்கிய தூறல் இடைக்கிடை பெரு மழையாகிப் பேயாட்டம் போட்டது. சற்று ஒயும். மீண்டும் இணுங்கும். குளிர் குறையவே இல்லை. பகலின் விடிவும் அதே தன்மையில்தான் அமைந்தது. குழந்தைகள் எங்கே போனார்களோ, என்ன ஆனார் களோ!' என்று ஆண்டாள் அம்மாளின் உள்ளம் பதை பதைத்தது. லட்சுமியின் பேதை மனம் காரணம் புரியாக் கலவரத்தாலும் சோகத்தாலும் கனத்துக் கிடத்தது. காலம் ஊர்த்து கொண்டிருந்தது. பன்னிரண்டு-ஒரு மணி இருக்கலாம். மாடு மேய்க்கச் செல்லும் ஒருவன் ஓடோடி வந்து மாறியாடும் பெருமாள் பிள்ளையிடம் ஒரு சேதி சொன்னான். ஊருக்கு வெளியே சிறிது தள்ளி, ரயிலடிக்குப் பாதை வளைந்து செல்கிற இடத்தில், ஒரு குன்று இருந் தது. பாறை என்றும், வெள்ளி மலை’ என்றும் விதவிதப் பெயர் பெற்றிருந்த அவ்விடத்தில், குன்றுதோறும் ஆடிடும் குமரன் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குன்றின் ஒருபக்கம் செங்குத்தாக உயர்ந்து, கீழே பெரும் பள்ளம் உடையதாக இருந்தது. ஆபத்தான இடம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/70&oldid=855605" இலிருந்து மீள்விக்கப்பட்டது