பக்கம்:மனிதர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7森 கிடைக்கிறபோது கிடைக்கட்டும் என்று அடித்துப் பேசவும் அவர் மனம் இடம் தரவில்லை. பஸ்ஸை பிடித்து எக்ஸ்பிரசுக்குப் போய்ச் சேரனுமே அதுதான் யோசனையாயிருக்கு என்று இழுத்தார் ராமலிங்கம், கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அகிலாண்ட தாயகி கவனித்துக் கொள்வா என்று தைரியமூட்டினார் ராசாப்பிள்ளை. எப்படி தட்டிக் கழிக்கமுடியும்? பூஜை சீக்கிரமே நடந்துவிடும்’ என்று ராசாப்பிள்ளை உறுதி கூறிய போதிலும், கோயிலில் நேரம் இழுத்துக் கொண்டே போயிற்று. மெது மெதுவாகத் தான் காரியங் கள் நடைபெற்றன. அம்பாளுக்குத் திருமுழுக்குச் செய்து, திருக்காப்பிட்டு. அலங்காரம் பண்ணி முடிப்பதற்கே வெகுநேரம் ஆகிவிட் டது. திரை விலகியதும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத் தில் அம்மனின் திருஉருவம் உயிர்பெற்றுச் சிரித்து நிற்கும் திவ்யமங்கள சொரூபமாகத் திகழ்ந்தது. அத்திருக் காட்சி யில் ராமலிங்கம் பக்தி பரவசமானார். தனது பரபரப்பை யும் பிரச்னைகளையும் மறந்தார். இந்தத் தரிசனத்துக்காக எத்தனை நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. தீபாராதனை முடிந்து, விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டதும், அப்ப நான் வரட்டுமா?’ என்று ராமலிங்கம் ராசா பிள்ளையிடம் கேட்டார். நல்லாயிருக்குதே நியாயம்! இத்தனை நேரம் இருந்து போட்டு பூஜைப் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல் போவ வாவது இருங்க இருங்க, தோ ஆச்சுது?’ என்றார். மற்றவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/76&oldid=855612" இலிருந்து மீள்விக்கப்பட்டது