பக்கம்:மனிதர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 என்ன செய்வது? போய்த்தானே தீரவேண்டும் என்று. முணுமுணுத்துக் கொண்டார் அவர். பல் வந்தது. அவசரம் அவசரமாகப் பிரயாணிகள் ஏறி இடம் பிடித்தார்கள். அவர்கள் பொறுமையை மேலும் சிறிது நேரம் சோதித்த பிறகு பஸ் சாவதானமாக கிளம்பியது. ஒடியது. ராமலிங்கம் அடிக்கடி கைக்கடி யாரத்தைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக்கொண்டிருந்: தார். எக்ஸ்பிரசை பிடிக்கும்படியா இது போய் சேருமோ என்னமோ!' என்ற உதைப்பு அவர்மனசை அலைகழித்தது, உம்ம். எல்லாம் அவள் அருள். நடக்கிறபடி நடக்கட்டும்’ என்றும் மனம் குறுகுறுத்தது. - இடை வழியில் ஒரு பெரும் சோதனையாக லெவல் இராவிங் கேட் அடைக்கப்பட்டு விட்டது. எப்பவோ வர விருந்த ஏதோ ஒரு டிரெயினுக்காக முன்கூட்டியே கதவை. அடைத்து விட்டார்கள். வழக்கமான இச் செயலினால் பாதிக்கப்படுகிற பஸ் பயணிகள் வழக்கமாகப் புலம்புகிற குறை கூறல்களை இந்த பஸ் பயணிகளும் புலம்பினார்கள். ராமலிங்கத்தின் மனமும் ஒத்துப் பாடியது. வெகுநேரம் எனத்தோன்றிய ஒரு கால அளவுக்குப் பிறகு- ரயில் வண்டி கடந்துபோன பின்னர்- கேட் திறக்கப்பட்டது. வண்டிகள், பஸ்கள், லாரிகள், மற்றும் பலவகை வாகனங்களும் ஏற்படுத்திய நெரிசலில், பஸ் மிக மெதுவாகத்தான் முன்னேற முடிந்தது. ராமலிங்கம் ஜங்ஷன் ஸ்டேஷனை அடைந்த போது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தன. -- ஏமாற்றம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன செய்வது. இனி என்ன செய்யலாம் என்று குழம்பியபடி நின்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/78&oldid=855614" இலிருந்து மீள்விக்கப்பட்டது