பக்கம்:மனிதர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧莎 ஒரு இடத்தில் சிற்றாறு அருவியாய் குதித்து, கவலை யற்ற குமரிப்பெண் போல் வீரிட்டுத் துள்ளி ஒடிக் கொண் டிருந்தது. அங்கே அவர்கள் காலார உட்கார்ந்து, பசிதீரச் சாப் பிட்டார்கள். நடந்து வந்த களைப்பும் உண்ட கிறக்கமும் து ன்டிவிட, சாவகாசமாக இருந்து வம்பளந்தார்கள். பிறகு, நேரமாயிட்டுது' என்ற உணர்வு தார்க்குச்சி போடவே, எழுந்து நடந்தார்கள். ஆரம்ப வேகம் நடை யில் சேரவில்லை, - நின்று நின்று, கீழே தூரத்தில் தென்படும் தோற்றங் களை இனம் காண முயன்று, அது இந்த ஊர்-இல்லை அந்த ஊர் என்று வாக்குவாதம் செய்து நேரம் போக்கிய வாறே நடந்தார்கள். -

ஏ, சீக்கிரம் போய்ச் சேரனும், யானை வந்தாலும் வந்திடும்’ ’ என்றார் ஒருவர்.
இந்தா வனமா மண்டி வளர்ந்து கிடக்குதே, இது தான் எலிபன்ட் கிராஸ், இங்கே உள்ளவங்க சுக்குநாறிப்புல் என்பாங்க. யானைகளுக்கு ருசிகரமான தீனி. மலைப்பகுதி களில் இந்தப் புல்லுக வளர்ந்து செழித்ததும், யானைகளின் நடமாட்டமும் அதிகமாயிடும். இந்தப் புல்லைத் தின்ன, தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் யானைகள் திரியும். ' -

விஷயம் தெரிந்த ஒருவரின் இந்தப் பேச்சு மற்றவர் களுக்கு பயம் விதைத்தது. அவர்கள் கால்களில் வேகம் கூடியது, - - ஏய், யானை வந்திருக்கு!’ என்று ஒருவர் அச்சக் குரல் கொடுத்தார். “శGః எங்கே?' என்று பதறி அங்குமிங்கும் பார்த் திார்கள் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/82&oldid=855619" இலிருந்து மீள்விக்கப்பட்டது