பக்கம்:மனிதர்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器岛 யானைகள் புல்லைத் தின்ன வரும்... இந்த ஆற்றிலே தண்ணீர் குடிக்க புலி, கரடி எல்லாம் வரும்- இப்படி ஆளுக்கு ஆள் ஒன்றைச்சொல்லி. தங்கள் உள்பயத்தை தாங்களே அதிகப்படுத்திக் கொண்டார்கள் சாத்தா பிரீதி" செய்ய வந்தவர்கள். கீழே உள்ள ஊர்களுக்கு மலை விலங்குகளால் ஆபத்து, ஏற்படாமல் அந்த மலைச் சாத்தாதான் காப்பாற்று கிறார்: காலாகாலத்தில் மலை மீது மழை பெய்ய வைத்து, ஆறுகளில் மிகுதியாக நீர் ஓடும்படி செய்து, தரை மீதுள்ள ஊர்களில் நடைபெறும் விவசாய அலுவல்களுக்கு அவர் தான் உதவி புரிகிறார் என்பதுமலை அடிவார ஊர்மக்களின் நம்பிக்கை. தலைமுறை தத்துவமாகக் கிராமவாசிகளின் உள்ளத்தில் ஊறி வளரும் நம்பிக்கை இது. சாத்தாவுக்கு நன்றி அறிவிப்பதுபோல், கிராமவாசுகள் தேர்ந்தெடுத்த சிலபேரை மலை மீது அனுப்பி, வருஷத் துக்கு ஒரு தடவை சுறப்பாக பூஜை பண்ணி வரும்படி செய்வார்கள். மழை பெய்யாமல் போனாலும், ஊர்களுக் குள் புலி, கரடி, யானை போன்ற மிருகங்கள் புகுந்து சேதம் விளைவித்தாலும், சாத்தாவுக்கு கோபம் ஏற்பட் டுள்ளது என்று கருதி விசேஷமாக பூஜை பண்ண முன் வருவார்கள். பயத்தின் மீது வளரும் இந்த பக்தி காரணமாக, சாத்தாவுக்கு செய்யப்படும் பூஜை நியதிகளில் எதையும் குறைத்துவிட அவர்கள் துணிவதில்லை. ஆற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணிர் கொண்டு வந்து எல்லாச் சிலைகளையும் குளிரக் குளிர அபிஷேகம் செய்வார்கள்... இளநீர், பால், எண்ணெய் மஞ்சள்பொடி என்று அபிஷேக அயிட்டங்கள் அதிகமாகவே இருக்கும். முடிவில், பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்சா மிர்த அபிஷேகம். மீண்டும் குளிர் நீர்க் குளிப்பாட்டு, அப்புறம் நெவித்தியம் (நிவேதனம்), தீபாராதனை எல்லாம் ஏகதடபுடல்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/85&oldid=855622" இலிருந்து மீள்விக்கப்பட்டது