பக்கம்:மனிதர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器器 அவர்கள் இருந்த இடத்திலிருந்து பங்களா இரண்டு மைல் தள்ளி இன்னொரு மலைமுகட்டில் அமைந்திருந்தது. சுற்றி வளைத்து இறங்கி ஏறிச் செல்ல வேண்டிய கடின மான நடைவழிதான். இருட்டில் அந்தப் பாதை வழியே போக முடியாது. இரவு முழுவதும் சாத்தா மேட்டில் தங்கியிருப்பது தவிர வேறுபோக்கு கிடையாது, வருவது வரட்டும் என்று துணிந்தார்கள் அவர்கள். அவர்களிடம் இரண்டு அரிக்கன் லாந்தர்கள் இருந்தன. மூன்று பேர் பேட்டரி லைட் வைத்திருந்தார்கள். முன்னிரவில் மிருகங்களின் நடமாட்டம் இராது. இருள் கணக்க கணக்கத்தான் புலிகளும் மற்ற மிருகங்களும் சஞ்சரிக்கத் தொடங்கும். இப்போதைக்கு அரிக்கன் லாம்பு கள் போதும் சாத்தா முன்னாலே ஒரு தீப்பந்தம் எளிய விடுவோம். பழைய துணிகள், கிழிந்த கோணிகளை எல்லாம் சுருட்டி, கைவசம் மிச்சமிருக்கிற எண்ணையை ஊற்றி, தீ வைப்போம்’ ’ என்று குழுவின் தலைவர் யோசனை கூறினார். உடனடியாக அது அமுல் நடத்தப்பட்டது. லாந்தர்களின் மங்கலான வெளிச்சம், எங்கும் கவிந்து தொங்கிய இருளின் ஆழத்தை புலப்படுத்தியது. தீப்பந்தத் தில் குதித்தாடி எறிந்த நெருப்பு நாக்கு, சிலைகள் மீதும் சுற்றிலும் விசித்திர நிழல்களைப் பூசியது. அனைவரும் பூஜை முடிந்ததுமே தத்தமது வயிற்றுப் பாட்டைப் பூர்த்தி செய்து விட்டதால் இப்போது அவர்களுக்கு முக்கிய வேலை எதுவும் இல்லை. துண்டை விரித்து நீட்டி நிமிரலாம். உடம்புக்கு ஒய்வு தேவை. பங்களாவில் இருந்தால் தூக்கம் தானாக வந்து இமைகளை தழுவி அவர்களை சொக்க வைத்திருக்கும். இந்த இடத்தில் LD—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/87&oldid=855624" இலிருந்து மீள்விக்கப்பட்டது