பக்கம்:மனிதர்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தாக்கம் எப்படி வரும்? குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந் தது. தேரம் ஆக ஆகக் குளிரும் அதிகரிக்கும். குளிரின் கொடுமையை விட, கொடிய வன மிருகங்களின் பயம் உள் ளத்தையும் உடலையும் அதிகம் நடுங்க வைப்பதா யிருந்தது. பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அநேகர் கவனித்துக்கொண்டிருந்தபோதே, சிலர் சுற்று வட்ட ரத் திலும் ஆற்றோரத்திலும் அலைந்து திரிந்து சுள்ளிகள் கொம்புகள், சருகுகள், சிறு சிறு கட்டைகள் என்று பலவித மான எரிபொருள்களையும் சேகரம் செய்து குவிந்து வைத் திருந்தார்கள். தேவைப்படுகிற சமயத்தில், தீ மூட்டி, குளிர் காயலாமே என்றுதான். பத்துப் பேரும் சாத்தா மேட்டில் உட்கார்ந்து வம்ப எந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஊர்க்கதை, பழங் கதை பேசினார். இன்னெருவர் சுவாரஸ்யமாக யார் எவளோடு போனான், எவள் எவனோடு தொடர்பு கொண்டு ஓடினாள் என்ற தன்மையில் காதல் விவகாரங் களை விவரமாக வர்ணித்தார். திருடன், கொலை, சாவு போன்றவற்றை எடுத்துச் சொல்லி மகிழ்வு கண்டார் ஒருவர். மலை மீது நடந்த வேட்டை அனுபவங்கள். ஊருக் குள் புகுந்து விட்ட மிருகங்களின் அட்டகாசங்கள் பற்றி வேறொருவர் சொன்னார். சும்மா பேசிக்கொண்டிருப்பதைவிட, சீட்டாடினால் இன்ட்ரஸ்டாக இருக்குமே. தூக்கமும் வராது’’ என்று ஐடியா கொடுத்து, துணைக்கு மூன்று பேரைச் சேர்த்து ஒரு அரிக்கன் லாந்தரையும் எடுத்துக் கொண்டு தனிக்குழு அமைத்து விட்டார் ஜாலி பிரதர் ஒருவர். எல்லாரும் முழிச்சுக் கிட்டிருந்தா எல்லாருக்கும் ஒரே அடியாத் தூக்கம் வந்துடும். டர்ன் வச்சு ஒன்றிரண்டு பேரு தூக்கம் போடுவோம். ரெண்டு மூன்று மன்னி நேர்ம் கழிச்சதும், வேறு சில பேரு தாங்கலாம். முதல்லே துரங் ஒ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/88&oldid=855625" இலிருந்து மீள்விக்கப்பட்டது