பக்கம்:மனிதர்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 னவங்க முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து காவல் காக்கலாம்’’ என்று யோசனை சொன்ன ஒருவர் சரியான துரக்கப்பிரியர். இரண்டாமவரின் வழி மொழி தலையோ, இதரர்களின் அங்கீகரிப்பையோ எதிர்பாராமல், தனது தீர்மானத்தை உடனடிச் செயலாக்கினார். இருட்டு பயங்கரமாக இருந்தது. வானத்திலே ஒளிப் பூக்கள் கண் சிமிட்டவில்லை. மேகப்படுதா விண்ணின் அற்புதங்களை மூடி மறைத்திருந்தது. குளிர்ந்த காற்று ஊஸ்-ஊஸ் எனப் பெருமூச்சுயிர்த்து ஊர்ந்து கொண்டிருந் திது . மழை வராது. இந்த நிலையில் மழைவேறு வந்து விட்டால் நம்ப பாடு ரொம்பவும் சிரமந்தான். சாத்தா மேட்டில் விழித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் நினைப் பும் இதுவாகவே இருந்தது. பக்தர் கோஷ்டியின் தலைவராகப் பணியாற்றியவர். ஒரு போர்வையினால் உடலை மூடி, துண்டினால் தலைப் பாகை கட்டிக்கொண்டு, கைகளை குளிருக்கு இதமாகச் சேர்த்து கட்டியவாறு, அப்படியும் இப்படியும் நடந்தார். அவ்வப்போது டார்ச் லைட்டை அடித்து, சுற்றுப்புறம் நெடுகிலும் ஒளி வீசி, கூர்ந்து கவனித்தபடி இருந்தார். எந்தப் பக்கத்திலிருந்து எந்த மிருகம் எப்படி வருமின்னு யாருக்குத் தெரியும் என்று அவர் மனம் முணுமுணுத்தது.

  • எதுக்கும் முன்னெச்சரிக்கையா தீயைக் கொளுத்தி போடுவோம். சருகு செத்தை எல்லாம்தான் நிறைய இருக் குதே! என்று அவர் எண்ணினார்.

இரண்டு ஆட்களை அழைத்து, மேட்டைச் சுற்றிலும் சருகு, சுள்ளி, குச்சி, கொம்பு வகையராவை வேலி மாதிரி பரப்பும்படி ஏவினார். சூழ்நிலையில் நிசப்தமே நிலவியது. மரங்கள் மண்டிய சில மலைப் பகுதிகளில் எப்போதும் நானா விதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/89&oldid=855626" இலிருந்து மீள்விக்கப்பட்டது