பக்கம்:மனிதர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3 புலிமீது ஒன்றும் படவில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தது. அங்கும் இங்குமாய்ச் சிதறி விழுந்த நெருப்புக்கட்டை கள் புல் புதர்களுக்குத் தீ மூட்டின. தி வேகமாய் பொங்கி எரிந்தது. அடர்த்தியாய் மண்டிக் கிடந்த புல்களினூடே உற்சாகமாய் துள்ளி விளை யாடத் தாவியது. நெடுகிலும் பரவியது. பாய்ந்து பரவும் தீயைக் கண்டு மிரண்டது புலி. அவ் வேளையில் எவரோ எறிந்த திக்கொம்பு ஒன்று அதன் உடம்பில் படவும், அது வேதனையால் உறுமியது. முன்னும் பின்னும், அங்கும் இங்குமாக ஒளிவீசிக் குதித்தாடிய தீயைத் பார்த்து உறுமியவாறே, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வோடு, இருட்டின் பக்கம் ஒடியது, ஒடி மறைந்தது. வனமாக வளர்ந்து கிடந்த புல் புதர்களினூடே தி ஒய்யார நாட்டியம் பயின்று முன்னேறிச் சென்றது. பெருந் தியாகக் கிளைத்துத் தாவி உற்சாகமாக ஒடிக்கொண் டிருந்தது. பார்ப்பதற்கு அழகாகவும், அச்சமூட்டுவதாகவும் இருந்தது அது. இனிமேல் பயமில்லை. இந்தத் தி லேசிலே அணை யாது. எந்த மிருகமும் அதைத் தாண்டி நம்ம பக்கம் வந்து விடமுடியாது இனிமேலே’ என்று சந்தோஷப்பட்டார் அண்ணாச்சி. சாத்தா கிருபை நமக்கு இருக்கையிலே நாம ஏன் கவலைப்படனும்?' என்று பக்தர்கள் முணுமுணுத்தார்கன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/95&oldid=855635" இலிருந்து மீள்விக்கப்பட்டது