பக்கம்:மனிதர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நிழல்களின் பின்னே... குளுகுளு என்று தண்ணிர் ஓடி, பாத்திகளில் பரவிப் பாய்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு இடத்தில் உடைப்பு ஏற்படவும், புலவர், மம்மட்டியை எடுத்திட்டு வா. சீக்கிரம் மண்ணை வாரிப் போடு என்று பரபரப்போடு சொன்னார் ராமையர். புதிதாக அவ்வூருக்கு வந்திருந்த சொக்கலிங்கம் வியப் போடு நிமிர்ந்து பார்த்தார். புலவர் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பது அதிசயமாகப்பட்டது அவருக்கு. அவருடைய ஆச்சரியம் வளர்ந்து கொண்டே போயிற்று.

புலவரை வீட்டிலே வரச் சொன்னாங்க. கடைக்கும் போய் சாமான்கள் வாங்கி வரணுமாம்.'
  • பசு மாட்டுக்குத் தீவனம் போட்டாச்சா, புலவர்?’
புலவர், தொட்டியிலே தண்ணி இறைச்சு ஊத்து. குளிக்கனும். '

எங்கும் புலவர் எதற்கு எடுத்தாலும் புலவர். அன்பர் பணி செய்யத் தன்னையே ஆளாக்கிக் கொண்டவர் போலும் இந்தப் புலவர் என்று தோன்றியது. சின்னவர் களும் பெரியவர்களும் சிறுசிறு வேலைகளுக்கேல்லாம் புலவரையே நாடினார்கள். அதிசயித்த சொக்கலிங்கம் நண்பரிடம் கேட்டார், புலவர் என்பது இந்த ஆளின் பெயரா?’ என்று. பெயர்னும் வச்சுக்கிடலாம். இவனை எல்லாரும் புலவர்-புலவர்னுதான் கூப்பிடுறாங்க. நெசமாவே கறுப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/96&oldid=855637" இலிருந்து மீள்விக்கப்பட்டது