பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 pogoroiul-eð upotpå fullä Guttsoff, GIULIG

0S C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C S

3. பெண்ணென்றால் புரியவில்லையே? :

SS S C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C C S

திருமணம் செய்து கொள்வது எதற்காக என்று புரிந்து கொண்டேன். அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கேற்கும் பெண்ணைப் பற்றித் தானே எனக் குப் புரியவில்லை என்ற ஒரு பெரிய கேள்வியை மீண்டும் கேட்டான் வாசு.

'பெண்ணையே புரியாமலா, ஒரு பெண்ணுக்கு மகனாய்ப் பிறந்திருக்கிறாய் என்று கேலி செய்தார் உலகநாதர்.

'தாய்க்கு:மகனாக இருப்பது வேறு தாரத்திற்குக் கணவனாக இருப்பது வேறு!

புரிகிறது வாசு புரிகிறது! நீ கேட்கப் போகும் கேள்விகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டால், எனக்குத்தொகுத்துச் சொல்ல முடியாது. கேட்கும் உனக்கும் புரியாது. முன்போல் மீளாத குழப்பத்தையும் உண்டாக்கி கொள்வாய். அதனால் பகுதி பகுதியாகப் பிரித்து தருகிறேன். அப்பொழுது கேள்வி கேட்க எளிதாக இருக்கும் அல்லவா!

பகுதியாக என்றால்?