பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/48

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40 மனைவயுடன மகழசசயாக வாழவது எபபடி

முதன்முதலாக, தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு ஆணானவன், எந்தவித முயற்சியிலும் ஈடுபடுவது உகந்ததல்ல. அது உரிய முறையும் அல்ல. மணமான ஒரு கன்னி, தனது தூய்மையை, இதுவரை காத்துவந்த ஒரு புனிதத்தை கற்பை, உடனே இழந்துவிட விரும்பமாட்டாள். தான் கண்ணெனக் காத்து வந்ததை கணவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று, விரும்பி வந்தாலும், அந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகவே ஊக்குவிக்க, விருந்தளிக்க, பகிர்ந்தளிக்க, பக்குவப்படுத்த வேண்டும்.

அதற்காக, அவள் மனம் அன்பினால் நெகிழுமாறு நடந்து கொள்ள வேண்டும். அந்த அன்பை முதலில் அவளிடமிருந்து பெறுவதுதான் கணவனின் முக்கிய நோக்கமாக, முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது புதுமையாக இருக்கிறதே? காரணமில்லாமல் நான் எதையும் சொல்லத் துணிவதில்லை வாசு. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால், புது மணப்பெண்ணின் அவயவங்கள் அனைத்தும் பூ போன்றவை. தொட்டால் மலரும் தன்மையுள்ளவை. பெண்மை மிகுந்தவை. அவசரமும், ஆத்திரமும், அவளை அடைந்தே முடித்திடவேண்டும் என்ற ஆவேசமும் கொண்டு, அவயவங்களை வலிந்து பற்றும்பொழுது, அழுத்தி தழுவும் பொழுது, அவயவங்கள் வலியெடுக்கும். அதனால் மனதில் திகில் பிடிக்கும். அந்தப் புதுசெயலில் மனம் அசூயை அடையும். வெறுப்பு அவள் மனதில் தலைதுாக்கிவிட்டால் அதில் சிறப்பு எப்படி அமையும்? முதல் கோணல் முற்றிலும் கோணல் அல்லவா?

மனைவியின் அன்பை எப்படிக் கவர்வது

  • - ای - * - . --محمي _ = * * г)