பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



என்பதற்காக நினைத்தபொழுதெல்லாம் நாம் சாப்பிட்டு விடுவதில்லை. அப்படியே அளவுக்கு மீறி சாப்பிட்டால் வயிறு என்னவாகும்? அஜீரணம் மட்டுமல்ல, அதையடுத்து எத்தனை எத்தனை நோய்கள் தொடரும்? தொந்தரவு செய்யும்? துன்பத்தைக் கொடுக்கும்?

அதுபோலவே, உடலுறவு கொள்வதற்காக துணைவி இருக்கிறாள் என்பதற்காக, நினைத்த நேரமெல்லாம் நடைபெற்றாக வேண்டும் என்பது இருவருக்குமே நல்லது அல்ல. அது அறிவுடைமையும் ஆகாது.

அழுக்குத் தீர குளித்தவர்கள் இல்லை, ஆசைதீர உடலுறவில் திளைத்தவர்களும் இல்லை என்பது பழமொழிதான். ஆகவே, உடலுக்குத் தேவையான பொழுதுதான் உடலுறவு வேண்டுமே தவிர, உள்ளம் தூண்டும் பொழுதெல்லாம் ஈடுபடலாம் என்பது அல்ல.

ஏன் உள்ளம் தூண்டுகிறது என்கிறீர்கள்? உள்ளம் என்பது எப்பொழுதும் இளமையாக இருக்கக்கூடியது. அது ஆவி போன்றது. தேகம் என்பது வலிமை இழந்து, முதுமை அடையக் கூடியது. காலம் நம்மை நாளாக நாளாக மாற்றி மெதுவாக முதுமையாக்கும். அதை விட்டு விட்டு, நாமே விரைவாக முதுமையைத் தேடி ஓடி, நம்மை நாமே கிழடுகளாக மாற்றிக்கொண்டு, கையாலாகாதவர்களாக மாற்றிக் கொள்கின்ற செயலை எப்படி மன்னிக்க முடியும்? அதனால்தான் இளமையான மனம் தூண்டுவதற்கேற்ப உடல் இயங்கக் கூடாது என்கிறோம் அதையேதான். நம்மவர்கள் மனக்கட்டுப்பாடு சுயக்கட்டுப்பாடு (selfcontrol) என்கின்றனர்.

அக்காலத்தில் மாதத்திற்கு இருமுறை என்றன ஆனால் நம் காலத்தில் அந்த கொள்கை நடைமுறைக்குச்