பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


என்றாலும், பலம் வீணாகத்தான் போகும். ஆனால் பழுதாக்கி விடாமல், பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும்.

நீ அதிகமாக சம்பாதிப்பதால் மட்டும் பணக்காரன் ஆகிவிட முடியாது. ஆனால், சேர்த்து வைப்பதால் மட்டுமே பணக்காரன் ஆகிட முடியும் என்று ஒரு பழமொழி உண்டு. அதையே உடல் நலம் என்று கூறக்கூடிய செல்வத்திற்கும் சொல்லலாம்.

வாழ்க்கையை ஒரு மண்குடத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள். அந்த மண்குடத்தில் நிறைய தண்ணி இருக்கிறது. அது ஒட்டையில்லாத குடம் என்றாலும், நீள் கசிந்து கசிந்து வெளியேற, நீர் அளவில் குறைந்து கொண்டே வருகிறது.

நாளாக நாளாக நீள் குறையும். ஒரு நாள் குடம் வெறுங்குடமாக வீற்றிருக்கும் என்பது போல, உடல் ஒரு மட்குடம் என்றால், உடலில் உள்ள சக்தி என்பது நீராக இருக்கிறது.

நம்மையறியாமலேயே நீர் கசிவது போல், சக்தி செலவாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதை உணர்ந்து சிக்கனமாக, சக்தியை, பலத்தை செலவழித்தால், நீண்ட நாள் நிம்மதியாக, நலமாக வாழ முடியும்.

இருக்கிறதே என்று இறைத்து விட்டால், எல்லாம் பாழாகும். அதற்குத்தான் உடல் நலத்தை வளர்த்திட நூல்கள் எழுதிய நான், இளைஞர்கள் வேண்டுகோளுக் கிணங்க, உடல் நலத்தைக் காக்கும் உபாயத்தினை விளக்க, இந்நூலை எழுதத் துணிந்தேன்.