பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

91




'இல்லாள் அகத்திருக்க, இல்லாதது ஒன்றுமில்லை' என்று பாடுகின்ற ஒளவையார், இல்லத்திற்கு இசைந்துவராத பெண் மண் என்றும் பாடுகிறாரே! பெண் இதனைப் புரிந்து கொண்டால் போதும்.

கணவனுக்கு உடலால், உள்ளத்தால், மனைவி தேவைப்படும்பொழுதெல்லாம் மனைவி நிலையுணர்ந்து பயன்படவேண்டும். அவ்வாறு தேவை நிறைவேறும் பொழுதெல்லாம் இருவரிடையே அன்பும் முகிழ்ந்து வளமாகிறது என்பதே உண்மையாகும்.

அதுபோலவே, மனைவிக்கும் சிறுசிறு தேவைகள் உண்டு என்பதைக் கணவனும் கண்டு கொண்டு, நிறைவேற்றி மகிழவும், மகிழ்விக்கவும் வேண்டும்.

கணவன்மார்களில் பலவிதம் உண்டு. மனைவியிடம் அழகும், கவர்ச்சியுமே அதிகமாக இருக்க வேண்டும் என்பார் சிலர். சரச லீலைகளில் ஈடுபாடும், உடலுறவில் பிடிப்பும் அதிகமாக உள்ளவளே மனைவியாக இருக்க வேண்டும் என்பாரும்; எப்பொழுதும் சந்தோஷமும் கலகலப்பும் உள்ளவளே மனைவியாக வேண்டும் என்பாரும், செலவு செய்யாத சிக்கனக்காரியாக அமையவேண்டும் என்பாரும் உண்டு.

இவற்றை மனைவிமார்கள் புரிந்து கொண்டு தன் கணவன் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டால், நிச்சயம் அங்கு அமைதியே நிலவும்.

தம்பதிகளுக்கு ஒரு சில குறிப்புக்கள். மற்றவர் குறையை மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்து கொண்டு, குணத்தைப் பாராட்டும் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒருவர்மனதில் ஒருவர் உயர்ந்த