பக்கம்:மனை ஆட்சி.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27


27

ம. இங்கே கணபதி என்கிற ஆள் ஒருவன் இல்லையா ? சமயற்காரன் ?

தா. ஆம், இருக்கிறான், அவனைப்பற்றி என்ன ?

ம. சாஸ்திரியாரின் பெயரைச்சொல்லி அவன் வாங்கிக் கொண்டு போனான்.


தா. என்ன வாங்கிக்கொண்டு வந்தான் ? எப்பொழுது ?

ம. சா ப் பா டு ம்-பலஹாரமும் - இரண்டு நாளைக்கு முன்பாக நாலறை ரூபாய்க்கு-நேற்று ஐந்து ரூபாய் எட்டணூவுக்கு -இன்றைக்கு ஏழரை ரூபாய்க்கு.

(பார்வதியும் சகுந்தலாவும் பின்புறமாக, அவனைப் போய்விடும்படி அதிகமாகச் சைகை செய்கிறார்கள்)


தா.என்ன இதெல்லாம் !-கணபதி !-கணபதி -எங்கே கணபதி ?-எங்கே போனான் அவன் ? அவன் இங்குதான் இருந்தான்கணபதி !-கணபதி !

அம்மாயி வருகிறாள்.

அ.எ ச மா ன், கொஞ்ச நாழிக்குமின்னே, கணபதி கையிலெ ஒரு மூட்டையெ எடுத்துகினு, போவும்போது, பாத்தென் ; நானு கேட்டதுக்கு அவன் வேலேயெ உட்டுட்டுப் போறதாவ சொன்னான்.

தா. (கோபத்துடன்) என்ன இதெல்லாம் ?

பா. எனக்கென்ன தெரியும் ? நீ

தா. அவனை சாப்பாடும் பட்சனங்களும் வாங்கிவரும்படி அனுப்பினாயா ?

ம. ஆமாம், கணபதி-வீட்டிலேயிருக்கும் பொம்மனாட்டி களுக்கு என்று சொன்னான்.

தா. ஓ!-அப்படியா சமாசாரம் -தெரிகிறது எனக்கு!

பா. இல்லை! அவ்வளவும் பொய் ! அவனை நான் கடனாக வாங்கி வரும்படிச் சொல்லவேயில்லே -நானவனுக்கு பணம் கொடுத்தனுப்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/31&oldid=1415116" இலிருந்து மீள்விக்கப்பட்டது