பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ix

பரத்தையினிடம் விருப்பம் கொண்டு தலைவன் சில சமயம் ச்ெல்வது உண்டு. அப்போது தலைவி ஊடல் கொள்வாள். தோழியின் உதவியாலும் தன்னுடைய முயற்சியாலும் தலைவியின் ஊடலைப் போக்கத் தொடங்கு வான் தலைவன். தலைவி ஊடலொழிந்து தலைவனுடன் ஒன்று பட்டு வாழ்வாள். இவை கற்புக் காலத்து நிகழ்ச்சிகள்.

இந்தக் காதற் கதையில் நானூறுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் அல்லது துறைகள் உண்டு. சங்க நூல்களில் இந்தத் துறைகள் தொடர்ச்சியாக இருப்பதில்லை; கலந்து கலந்து வரும். இவற்றைக் கதைபோலக் கோத் துத் தொடர்பு படுத்தி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செய்யுள் அமைத்துப் புலவர்கள் ப்ாடியிருக்கும் ஒருவகை நூலுக்குக் கோவை என்று பெயர்; அகப்பொருட் கோவை யென்றும் ஐந்திணைக் கோவையென்றும் சொல்வார்கள்.

3

இந்தப் புத்தகத்தில் நற்றிணையிலிருந்து எடுத்த ஒன்பது பாடல்களுக்குரிய விளக்கங்களைக் காணலாம். முதற்பாட்டாகிய கடவுள் வாழ்த்து அகத் துறையை . சார்ந்ததல்ல. எட்டுத் தொகையில் உள்ள நூல் ஒவ்வொன்றிலும் கடவுள் வாழ்த்து உண்டு. இந்தக் தடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவளுர் என்பவர். அவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் வேறு தொகை நூல்களிலும் உள்ளன. இந்தப் பாட்டுத் திருமாலைப் பற்றியது. -

மற்றப் பாடல்களில் களவுக் காதலைப் பற்றிய பாடல் கள் ஆறு (3,4,5,6, 8,9) கற்பு வாழ்க்கையைப் பற்றி யவை இரண்டு (2, 7); தோழி தலைவன் காதலை எடுத்துத் தலைவிக்குச் சொல்வது ஒன்று; வீட்டுக்குப் புறம்பே பதற் காலத்தில் வந்து தலைவியைச் சந்திக்கும் தலைமகன் சில நாள் வாராமையால் வருந்தும் தலைவி சொல்வது ஒன்று: